• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வம்சகால வரலாறு]

யுவான் வம்சம்

மங்கோலிய தெமூச்சன் 1206ம் ஆண்டில் நாட்டை நிறுவினார். 1271ம் ஆண்டில் ஹுப்பிலி நாட்டுக்கு யுவான் பெயர் சூட்டினார். 1279ம் ஆண்டில் சொன் வம்சத்தை தோற்கடித்து தாதுவை (இன்றைய பெய்சிங்)தலைநகராக உருவாக்கினார்.

மங்கோலிய இனம் பெரிய பாலைவனத்துக்கு வடக்கே வாழ்ந்தது. திமூச்சன் பல்வேறு பழங்குடிகளைத் தோற்கடித்து மங்கோலிய ஒன்றிணைப்பை நிறைவேற்றினார். மங்கோலிய நாட்டை நிறுவ தன்னைதானே சன்சிஸூஹான் என அழைத்தார். இதற்கு முன் முங்கோலிய படைகள் மத்திய ஆசிய நாடுகளையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பாரமேற்குக நாட்டையும் ஆக்கிரமித்தன.

யுவான் வம்சகாலத்தில் வடக்கு பகுதி நீண்டகாலமாக போருக்குள்ளாக்கப்பட்டது. கடுமையாக பாதிக்கப்பட்டது. யுவான் ஸூச்சு மன்னர் வேளாண் தொழிலை ஆதரித்துப் பேசி மஞ்சள் ஆற்றை கட்டுப்படுத்தினார்.

தாங், சொன் மற்றும் யுவான் வம்ச ஆட்சிக் காலத்தில் சீனா உலகில் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. பொருளாதாரம் பண்பாடு ஆகியவை அண்டை நாடுகளை பெரிதும் ஈர்த்தன. பல்வேறு நாட்டு தூதர்களும் வணிகர்கள் அறிஞர்கள் ஆகியோரும் வந்து போனர். சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்குமிடையிலான பரிமாற்றம் முன்கண்டிராத வாறு மேற்கொள்ளப்பட்டது. யுவான் வம்மம் ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடர்பு கொண்டது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வணிகம் வளர்ந்தது. பல நாடுகளுக்கு சீனக் கப்பல்கள் வந்து சென்றன. சீனாவின் அச்சசு நுட்பம், வெடி மருந்து, திசை காட்டும் கருவி ஆகிய மூன்று கண்டுபிடிப்புக்களின் தொழில் நுட்பம் யுவான் வம்சம் ஆட்சி காலத்தில் அரபு நாடசுகள் வழியாக ஐரோப்பாவுக்கு பரவியது. அரபு நாடுகளின் வானியல் தத்துவவியல், மருத்துவவியல், கணித ஆகியவை படிப்படியாக சீனாவுக்கு பரவின. இஸ்லாமிய மதமும் சீனாவுக்கு பரிவி வந்தது. தவிர, சீனாவின் யுநான் மாநிலம் மூலம் தரை வஇப் போக்குவரத்து ஏற்பட்டு சீனாவிலான பீங்கான் பொருட்கள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மொராக்கோவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1275ம் ஆண்டில் வெனிஸ் வணிகரின் மகன் மார்க்கோ போலோ தமது தந்தையுடன் சீனாவுக்கு வந்து 17 ஆண்டுகளாக சீனாவில் தங்கியிருந்த பின் "பயண குறிப்புகள்"எனும் நூல் எழுதினார். பல நூற்றாண்டுகளில் மேலை நாட்டு மக்கள் சீனாவைவும் ஆசியாவையும் அறிந்து கொள்வதற்கு இதுவும் முக்கிய நூல்களில் ஒன்றாகும்.

மங்கோலிய ஆட்சி ஹான் இன மக்களை மிக கடுமையாக சுரண்டி அடக்கி ஓடுக்கியதால் ஹான் இன மக்கள் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 1333ம் ஆண்டில் மதம், ரகசியமாக சங்கம் உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் கிளர்ச்சிகள் சீனாவின் முழுவதிலும் பரவின. 1351ம் ஆண்டில் மஞ்சள் ஆற்றைக் கட்டுப்படுத்திய விவசாய்த் தொழிலாளர்கள் சிவப்பு துணியை அடையாளமாகக் கொண்டு பெரும் கிளர்ச்சியை உண்டாக்கினர். 1341ம் ஆண்டில் ஹோச்சோ சிவப்பு துணி படைத் தளபதி சுயூவான்சான் தலைமையிலான விவசாயக் கிளர்ச்சி படைகள் தலைநகர் தாதுவை தாக்கி யுவான் வம்சத்தை தூக்கியெறிந்து மின் வம்சத்தை நிறுவின.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040