• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசைக் குழு நடத்துனர்கள்]
யன் லியாங் குன்

யன் லியாங் குன் 1923இல் ஊஹானில் பிறந்தவர். சீன இசைவாணர்கள் சஹ்கத்தின் துணைத் தலைவர். நடத்துதல் மற்றும் கூட்டிசைக் கலா சாலையின் சபைத் தலைவர் மற்றும் மத்திய வாத்தியக் கோஷ்டியின் நடத்துனர் போன்ற பதவிகளை வகித்தார். இவர் 1938இல் "ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிட்டு அழிவில் இருந்து சீனாவைக் காக்கும் பாடல் இயக்கம்" மூலம் இவருடைய நடத்துனர் தொழிலை மிகச் சிறிய வயதில் ஆரம்பித்தார். 1940இல் இவர் முதல் தடவையாக பொது மக்கள் முன்னால் மஞ்சல் நதி கூட்டிசை பாடுவதற்கு "சிறுவர் இசைக் குழுவை" நடத்தினார். 1942இல் தேசிய இசை பாதுகாப்பு மையத்தில் இசைத் தொகுப்பு மற்றும் கோட்பாட்டு இலாகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பேராசிரியர் ஜயாங் திங்சியன்னின் ஒரு மாணவனாகி திரு ஊ சௌ போவிடம் இசை நடத்தும் கல்வியைக் கற்றார். 1947 இவர் பட்டதாரியான பின்னர், ஹாங்காங் சென்று சீன இசைப் பாதுகாப்பகத்தில் இசையமைப்பதில் ஈடுபட்டு, இசைக் குழுவை நடத்துவது பற்றிக் கற்பித்தார்.

1949இல் நவ சீனா உருவாக்கப்பட்ட பின்னர் யன் இசைப் பாதுகாப்பு மையத்தில் கற்பித்ததோடு, அந்தப் பள்ளியின் இளைஞர் வேலைக் குழுவில் கூட்டிசை நடத்துனராகப் பதவி ஏற்றார். 1952இல் மத்திய பாடல் மற்றும் நடனக் குழுவின் கூட்டிசை நடத்துனராகப் பதவி ஏற்றார். 1954இல் இவர் முன்னாள் சோவியத் ஒன்றியத்துக்கு மேற்படிப்பைத் தொடர்வதற்குச் சென்றார். இவர் சாய்கோவ்ஸ்கி இசைப் பாதுகாப்பகத்தில் நடத்துதல் பட்டப்பின் படிப்பு இலகாவில் இன்னிசை மற்றும் கூட்டிசை நடத்துதலில் சிறப்பெய்தி Anosov மற்றும் Sokolov இன் ஒரு மாணவராகவும் வந்தார். 1958இல் அவர் நாடு திரும்பி, சீன மத்திய கூட்டிசையின் நடத்துனராகப் பதவி ஏற்றார். 1959இல் ஒரு தேசிய தினக் கொண்டாட்டத்துக்காக வேண்டப்பட்ட பீத்தோவனின் ஒன்பதாவது இன்னிசையை நடத்தினார். 1961இல் இவர் முதலாவது கூட்டிசைக் கச்சேரியை நடத்தினார். 1964இல் 1000 மக்கள் பங்கு கொண்ட நடனம் மற்றும் பாடல் கூட்டிசை வீரகாவியமான "கிழக்கத்தேச சிவப்பு" என்பதற்கான முதலாவது நடத்துனராகவும் அதிபராகவும் பதவி ஏற்றார். 1979இல் இவர் பிலிப்பின்ஸ்சில் முதலாவது அமர்வான சர்வதேச கூட்டிசை விழாவில் மத்திய கூட்டிசை குழுவுக்குத் தலைமை தாங்கினார். 1982இல் இவர் மத்திய வாத்திய கூட்டிசைக் குழுவை மேர்கு ஜபோப்பிய இசை நாடகத்தை பாடிநாடிப்பதற்கு நடத்தினார்.

1983இல் யன் ஹாங்கேரி கோடலி ஞாபகச் சின்ன சபையால் கோடலி வேலைகளின் அறிமுகம் மற்றும் கற்பித்தல் முறைகள் போன்றவற்றுக்கு இவருடைய பங்களிப்புக்காக ஞாபகச் சின்ன முத்திரையும் மற்றும் சான்றிதழம் விருதாகக் கொடுக்கப்பட்டது. 1985இல் ஹாங்காங்கில் இவர் "மஞ்சள் நதி இசை விவாவுக்கு" மத்திய கூட்டிசைக் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்று பின்னர் ஹாங்காங்கில் நடத்த "ஆசிய இசை விழா" விலும் அழைப்பின் பேரில் பங்கேற்றார். 1986இல் இவர் நிலையான சபையின் ஒரு அங்கத்தவராகப் பதவிவகித்ததுடன் "பெய்ஜிங் கூட்டிசை விழா"வின் இரண்டாவது அமர்வில் நடத்துனர் குழுவுக்கு தலைவர் பொறுப்பையும் ஏற்றார். இதே வருடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டிசை நடத்துதல் கலாச்சாரலைக்கு தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

யன் வட அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற பகுதிகளில் நிகழ்ச்சி நடத்துவதற்குச் சென்ற தூதுக்குழுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். இவர் பல இடங்கில் அழைப்பின் பேரில் விரிவுரைகள் வழங்கியுள்ளார். யன் சீனாவில் தொழில் முறைக் கூட்டிசை அமைத்த முன்னோடிகளில் ஒருவராக இருந்துள்ளார். இவருடைய நடத்துதல் பாணி எளிமையான சைகை உணர்த்தல்களுடன் அழகானதாகவும் சரியானதாகவும் இருக்கின்றது. யன் கூட்டிசை நடத்துனர்களின் ஒரு சிறந்த சீனக் கலைஞராக இருக்கிறார்.

[பாராட்டுக்கான இசை]: 《மஞ்சள் நதிக் கூட்டிசை》

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040