|
![]() |
சென் சியேயாங்
புகழ்மிக்க நடத்துனரான சென் சியேயாங் 1953இல் ஒரு இசைப் பாதுகாப்பு மையத்தின் இணைக்கப்பட்ட இடைநிலைப் பாலசாலையில் சேர்ந்தார். இவர் முதலில் பியானோ கற்றார். பின்னர் இசைத் தொகுப்பு வகுப்பில் சேர்ந்தார். 1960இல் இவர் நடத்துதல் துறையில் பட்டப்படிப்பு மாணவராகச் சேர்ந்து பேராசிரியர் குவாங் சியௌ தொங்கின் ஒரு மாணவரானார். 1965இல் திறமையான கல்விசார் சாதனைகளுடன் பட்டதாரியாகி ஷாங்காய் பாலே வாத்திய கோஷ்டியின் ஒரு நிரந்தர நடத்துனராக வந்தார். இவர் 1970களில் இருந்து வட கொரியா, ஜப்பான், கனடா, மற்றும் பிரான்சு போன்ற நாடுகளுக்கு அரங்கேற்றுவதற்காக அழைக்கப்பட்டார்.
1981இல் சென் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்குச் சென்றார். இவர் பின்பு யேல் பல்கலைக்கழகத்தில் நடத்துனர் படிப்பைத் தொடர்வதற்கு ஓட்டோ முல்லெரின் ஒரு மாணவனாக சேர்ந்தார். இவர் வெற்றிகரமாக நியூயார்க் நவீன இசை வாத்தியக் கோஷ்டி, புலூக்ளின் இன்னிசை வாத்தியக் கோஷ்டி மற்றும் ஹானாலுலு வாத்தியக் கோஷ்டி போன்றவற்றுடன் மேடையேற்றங்கலை வழங்குவதற்கும் நவீன சீன தொகுப்பாளர்களின் இசை வேலைகளின் அறிமுகத்துக்கும் கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டார்.
1982இல் இவர் அமெரிக்காவின் அழைப்பின் பேரிய் அஸ்போன் இசை விழாவை நடத்தி பெரிய வெற்றியை அடைந்தார். அதன் பின்பு இவர் பிலிப்பின்ஸ் தேசிய இன்னிசை வாத்தியக் கோஷ்டியையும் மற்றும் ஹாங்காங் வாத்திய கோஷ்டியையும் நடத்தினார். பின்னர் பிரான்ஸில் இசை பதிவுக் கூட்டுத்தாபணத்தின் அழைப்பின் பேரில் பீதொவெனின் முதலாவது மற்றும் நான்காவது இன்னிசையைப் பதிவு செய்வதற்கு பெய்ஜிங் மத்திய வாத்தியக் கோஷ்டியை நடத்தினார். இவர் சீனப் புரட்சியின் வீரகாவியப் பாடல் இசை நடன படைப்புக்களை நடத்துவதிலும் பங்கு பற்றினார்.
சென் 1985இல் இருந்து முன்னாள் சோவித் ஒன்றியம், ஜப்பான், ஸ்காட்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் நிகழ்ச்சி நடத்தச் சென்றார். இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலடஜன் பிரபலமான இன்னிசை ஒலிநாடாக்களை பதிவு செய்வதற்கு மத்திய வாத்தியக் கோஷ்டி மற்றும் ஷாங்காய் இன்னிடை வாத்தியக் கோஷ்டியையும் நடத்தினார்.
1987இல் "ஷாங்காய் வசந்தகாலம்" இசை விழாவில் "சிறந்த நடத்துனர்" விருதைப் பெற்றார். இவரால் நடத்தப்பட்ட "வண்ணாத்திப் பூச்சிக் காதலர்கள்" என்ற வயலின் கச்சேரியானது 1989இல் சீனப் பதிவுகள் கூட்டுத்தாபணத்தால் வழங்கப்பட்ட "தங்க இசைத்தட்டு பரிசை" வென்றது. இவர் கேம்பிரிட்ஜ் சர்வதேச வாழ்க்கைப் பதிவு நிலையத்தினால் வெளியிடப்படும் சர்வதேச வாழ்க்கை வரலாறு அகராதியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
சென் தற்போது தேசிய முதல்தர நடத்துனர் ஷாங்காய் இன்னிடை வாத்தியக் கோஷ்டியின் இசை மேற்பார்வையாளர் மற்றும் நடத்தும் முதல் அதிபராகவும், ஷாங்காய் இசைவாணர் சங்கத்தின் துணைத் தலைவர், சீன இசைவாணர் சங்கத்தின் இயக்குநர் மற்றும் ஷாங்காய் இன்னிடை கலைச் சங்கத்தின் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கிறார்.
[பாராட்டுதலுக்கான இசை]: 《பிரமபுத்திரா》
|