|
![]() |
சென் சுஒகுவாங்
சென் சுஒகுவாங் ஷாங்காய்யில் பிறந்தார். இவர் 1956இல் இசைப் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கப்பட்ட இடைநிலைப் பாடசாலையில் பியானோயில் சிறப்பு எய்தி பட்டதாரியானார். 1981இல் நடத்துதலை சிறப்பாகக் கற்று பட்டதாரியானார். 1981 கோடை காலத்தில் சென் சுஒகுவாங் பிரபலமான நடத்துனர்கள் செய்ஜி ஒசாவாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்து தங்லெவூட் இசை நிலையத்திற்கும் மிச்சிஹன் பல்கலைக்கழகத்திற்கும் படிப்பதற்குச் சென்றார். இவர் 1982இல் ஒரு முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1985இல் இவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் சீனாவின் முதலாவது இசைக் கலை முனைவர் என்ற பெருமை பெற்றார்.
1985ில் இருந்து 1987 வரை இவர் கான்சாஸ் பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார்.
1987ில் சென் சுஒகுவாங் மத்திய Philharmonic வாத்தியக் கோஷ்டியின் நடத்துனராக வந்ததுடன் இவர் இந்த அணியை நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ, சான் பிரான்சிகோ, மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற 24 நகரங்களில் வரலாற்றுக் காட்சிகளை அரங்கேற்ற தலைமை தாங்கிச் சென்றார். இந்த இசைக் கச்சேரிகள் உயர்ந்த வெற்றியைப் பெற்று, ரசிகர்கள் மற்றும் இசை விவர்ச்சகர்களால் உயர்வாகப் போற்றப்பட்டன.
1990இல் இருந்து 2000 வரை சென் சுஒகுவாங் விட்சித்தா இன்னிசை வாத்தியக் கோஷ்டியின் இசைத் தலைமை ஆய்வாளராகவும் நடத்துனராகவும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
1992இல் இருந்து 1996 வரை இவர் ரோடி தீவு Philharmonic வாத்தியக் கோஷ்டிக்கு இசைத் தலைமை ஆய்வாளராகவும் நடத்துனர் பதவிக்களுக்கும் நியமிக்கப்பட்டார். இவர் இசை வாணர்களினாலும் பார்வையாளர்களினாலும் வரவேற்கப்பட்டு மதிக்கப்பட்டார். சென் சுஒகுவாங் ஜுரிச் டொன்ஹாலே வாத்தியக் கோஷ்டி, வான்கூவெர் இன்னிசை வாத்தியக் கோஷ்டி, மெக்சிகோ தேசிய இன்னிசை வாத்தியக் கோஷ்டி, டேங்கிள்வுட் இசை விழா வாத்தியக் கோஷ்டி, ஹம்பர்க் இளைஞர் வாத்தியக் கோஷ்டி, இரசியா Philharmonic வாத்தியக் கோஷ்டி, சிலோவ்க் வானொலி இன்னிசை வாத்தியக் கோஷ்டி, ஹைப்பா இன்னிசை வாத்தியக் கோஷ்டி, கொஹ்கொங் Philharmonic வாத்தியக் கோஷ்டி, புசன் Philharmonic வாத்தியக் கோஷ்டி மற்றும் தைபெய் இன்னிசை வாத்தியக் கோஷ்டி உள்ளிட்ட பல இசைக் குழுக்களினால் நடத்துனராக இருப்பதற்கு அழைக்கப்பட்டார். இவர் ஒரு மிகத் திறமையான இசைவாணர், இவருடைய நடத்துதல் மிக வசீகரமாக இருக்கிறது என பாராட்டப்பட்டார்.
1996ில் சென் சுஒகுவாங் தன்னுடைய கடல்கடந்த வேலைகளை ஓரளவு குறைத்து சீனாவுக்குத் திரும்பி வந்தார். இவர் மத்திய Philharmonic வாத்தியக் கோஷ்டியின் அடிப்படையில் சீன இன்னிசை வாத்தியக் கோஷ்டியை உருவாக்கி சீன இன்னிசை வாத்தியக் கோஷ்டியின் முதலாவது கலைத் தலைமை ஆய்வாளராக சேர்ந்தார். சீன இன்னிசை வாத்தியக் கோஷ்டி நூற்றுக்கணக்கான திறமையான இசைவாணர்களை சீன இன்னிசையை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான இசை வேலைகளைச் செய்வதற்கு அழைத்தது. சென் சுஒகுவாங் தலைமை தாங்கிய இந்த வாத்தியக் கோஷ்டியின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களினாலும் இசை விமர்சகர்களாலும் போற்றப்பட்டன.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《சூரியோதயம் மகிழ்ச்சியானது》
|