• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசைக் குழு நடத்துனர்கள்]

பியௌ தொங் ஷெங்

பியௌ தொங் ஷெங், லியௌ நிங் மாகாணத்தில் ஷென் யாங்கில் 1934இல் பிறந்த பிரமலமான இசைக்குழு நடத்துனர் ஆவர். 1949இல் இவர் கலைத் தொழிலை ஆரம்பித்துத் தொடர்ந்து நடாத்தினார். பின்னர் இவர் லு சுன் கலைக் கழகத்தில் கற்றார். பியௌ மத்திய ஆடம் பாடல் குழுவின் (தேசிய ரீதியில் முதல் தரம்) ஒரு நடத்துனராகவும், சீன மத்திய ஒலிப்பதிவுகள் மற்றும் வீடியோ வெளியிட்டு இல்லத்தின் இயக்குனராகவும் இருந்து இருக்கிறார். இவர் தற்போது சீனத் தேசிய வாத்திய இசைக் கலா நிலையத்தின் தலைவர். சீன ஒலிப்பதிவு மற்றும் வீடியோ சஹ்கத்தின் துணைத் தலைவர் மற்றும் ஏனைய பதவிகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார்.

பியௌவின் 50 வருட இசைத் தொழில் காலத்தில் இவர் பிரதானமாக நாட்டார் இசை வாத்தியங்களில் நடத்துனர் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். இவர் சீனக் கலை விழாவின் முதலாவது அமர்வின் ஆரம்பவிழாவில் பல நூற்றுக்கணக்கான மக்களால் பாடப்பட்ட "புராதன சீன இசையை" நடத்தி இருக்கிறார். இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வாத்தியக் கோஷ்டிகளின் நடத்துனராகப் பயணம் செய்திருக்கிறார். அதே நேரத்தில் இவர் பல திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஒலிப்பதிவு ஆப்பம் போன்றவற்றிலும் இசையமைத்து இருக்கிறார்.

இவருடைய தொழிலை நடத்துனராக முன்னெடுத்துச் சென்ற அதே நேரத்தில், இவர் இசைக் கோட்பாடுகளின் ஆய்வு மற்றஉம் நாட்டார் இசைத் தொகுப்பு போன்றவற்றும் கவனம் செலுத்தினார். இவர் பிஓனி தேவதையின் கட்டுக்கதையான நாட்டார் இசையின் இனிமையான கவிதை, ஜியன்சு நாட்டார் இசையின் நாட்டார் இசைக் கட்டுரையின் வாத்தியக் கோஷ்டி, அலி மலையின் தரைப்படம், வெற்றியின் சீன குழலிசைக் கொண்டாட்டம், புல்வெளியின் மீது தனிப் பிடில் ஓசை, சீனாவின் வாத்திய துதி மற்றும் கூட்டு இசை மற்றும் ஏனையவற்றை வெற்றிகரமாக மக்கள் இசை மற்றும் வாராந்திர இசைச் சஞ்சிகை போன்ற அவ்வப்போது வெளிவருகின்றவற்றில் தனது விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டார். இவர் வாத்தியங்கலை நடத்தும் மறைகளின் வழிகள், நடத்துதலுக்கான அறிமுகம், பிறப்பிடத்தை நோக்கி முடிவில்லாத பிரியத் தொகுப்பு மற்றும் டிராகன் இசை போன்றவற்றை வெளியிட்டார்.

1993இல் பியௌ சீனக் கலாச்சார அமைச்சால் வழங்கப்பட்ட "கலைக்கு சிறந்த பங்களிப்பு நிபுணர்" விருதினைப் பெற்றார். இவர் அரசவை வழங்கும் சிறப்பு ஊதியத்தை அனுபவிக்கிறார்.

[பாராட்டுக்கான இசை]: 《கச்சிதமான திருமண இன்பம்》

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040