|
![]() |
லி தெ லுன்
லி தெ லுன் சீன இன்னிசை வாத்தியக் குழுவின் ஒரு சபை உறுப்பினராகவும், சீன இசைவாணர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், மத்திய பிலார்மோனிர் வாத்திய கோஷ்டியின் முன் கலை வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவர் 1917இல் பெய்ஜிங்கில் பிறந்தார். இவர் சிறுவனாக இருந்த போதுவயலின் மற்றும் பியானோ போன்றவற்றை கற்கத் தொடங்கினார். ப்பு ஜென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த காலப்பகுதியில் இவர் ஆரிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பல காட்சிகளை பாடுவதற்கு ஒரு இநஅனிசை வாத்தியக் கோஷ்டியை அமைத்தார். 1940ில் இவர் குஓ லி ஷாங்காய் இசைச் சிறப்புப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். இவர் ஷ்வெட்சோவ் மற்றும் ஆர் டக்ஸன் போன்றவடிமிருந்து எப்படி ஸெஸ்லோ வாசிப்பது என்று கற்றுக்கொண்டார். இவர் டபிள்யூ பிராங்கெல்லிடம் இசைக் கோட்பாட்டையும் கற்றார்.
1942இல் இவர் தமது நண்பர்களுடன் "சீன இளைஞர் இன்னிசை வார்த்தியக் கோஷ்டி"ஐ அமைத்து பல மேடைகளல் பங்குபற்றினார். 1943இல் பட்டதாரி ஆகிய பின்னர், இவர் யன் அன்னுக்கு மத்திய Philharmonic வாத்தியக் கோஷ்டிக்கு கற்பிப்பிப்புதற்கும் நடத்துவதற்கும் சென்றார். 1949இல் இவர் மத்திய ஒபெராவின் நடத்துனராக வந்தார்.
1953இல் இவர் ஒரு பட்டபின் படிப்பு மாணவனாக பிரபல நடத்துனர் பேராசிரியர் என் அனேசோவ்விடம் மாஸ்கோ இசைப் பாதுகாப்பு மையத்தில் கல்வி பயின்றார். இவர் 1957இல் சீனாவுக்குத் திரும்பி வந்து மத்திய Philharmonic வாத்தியக் கோஷ்டியில் நடத்துனராக இருந்தார்.
பெய்ஜிங்கில் அரங்கேற்றியது தவிர இவர் ஐப்பான், வட கொரியா, ஹாங்காங் மற்றும் மாஸ்கோவில் நடைபெற்ற மத்திய Philharmonic வாத்தியக் கோஷ்டிக்குத் தலைமை வகித்தார். இவர் கௌரவ நடத்துனராக லெனின்கிராட், பின்லாண்ட, செக், மற்றும் கியூபா போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றார். 1959இல் இருந்து இவர் பல பிரமாண்டமான வாத்தியக் கோஷ்டிகளை நடத்தினார். 1987இல் பெய்ஜிங்கில் மிகச் சிறந்த வசந்தகால இன்னிசை கச்சேரியை 800 கலைஞர்களைக் கொண்டு நடத்தினார்.
1985க்கு பின்னர் லி தெ லுன் ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல் கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ச்சி நடத்தச் சென்றார்.
இவர் ஹெ லிரிங், மா சிசொங் ஊ சுச்சியாங், சென் பெய்சுன் மற்றும் ஏனையவர்களால் தொகுக்கப்பட்ட பல இன்னிசை படைப்புக்களை நடத்தினார். மேலும் இவர் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களான ஒயிஸ்ராக், மெய்னுகின், ஸரெம், யே யே மா, நிக்கோலாயெவா, ஸ்ரக்மான் மற்றும் பல டஜன் சீன இசை வல்லுனர்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தினார்.
லி தெ லுன் 1985இல் பரிசிஸ் இடம் பெற்ற சர்வதேச மெய்னுகின் வயலின் போட்டி மற்றும் 1986இல் மாஸ்கோவில் சைகோவ்ஸ்கி சர்வதேச போட்டி போன்றவற்றுக்கு நடுவதாக இருந்தார்.
இவர் அண்மை ஆண்டுகளில் இன்னிசை வளர்ப்பதற்குத் தன்னை அர்ப்பணித்தார். இவர் பெய்ஜிங், தியன்ஜின் மற்றும் குவாங் சோ போன்ற 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பயிற்சி எடுத்து மேடைஏற்றினார். இவர் உள்ளூர் இசைக் குழாமின் ஆரம்ப அடிப்படைகளை மேம்படுத்தினார். மேலும் இவர் இன்னிசை பற்றி பல சொற்பொழிவுகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நிகழ்த்தினார்.
1980இல் லி தெ லுன் மக்கள் சீனக் குடியரசின் கலாச்சார அமைச்சினால் கௌரவப் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்பு 1986இல் இவர் லிஸ்ற் நினைவுப் பரிசைப் பெற்றார். 2001 அக்டோபர் 19இல் லி தெ லுன் 84 வயதில் இறந்தார்.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《வசந்தகால விழாவின் ஆரம்பப் பாடல்》
|