• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசைக் குழு நடத்துனர்கள்]

ஜெங் சியௌ இங்

சீனாவின் முதல் பெண் இசை நடத்துனரான போராசிரியை ஜெங் சியௌ இங் சீன இசை நாடகத்தின் முதல் நடத்துனர், இசைப் பாதுகாப்பு மையத்தின் நடத்துதல் இலாகாவின் தலைவர் மற்றும் பெண்கல் Philharmonic வாத்தியக் குழுவின் தலைமைக் கலை ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார். இப்போது இவர் சியௌ மென் Philharmonic வாத்தியக் குழுவின் தலைமை இயக்குநராகவும் தலைமை நடத்துனராகவும் செயல்பட்டு வருகிறார். இது அரசின் ஆதரவு பெற்ற முதல் இன்னிசை வாத்தியக் குழுவாக, பொறும்பான முறையில் இயங்குகிறது. இவர் சீன இசைக் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 1981இல் இவர் கலை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கலைச் சங்கங்களின் நடத்துனருக்கான முதல் பரிசை வென்றார். 1985இல் இவர் பிரான்சின் கலை மற்றும் இலக்கியத்திற்கான கௌரவப் பதக்கம் மற்றும் முதியோர் தேசிய அர்ப்பணிப்பு விருதையும் வென்றார். கேம்பிரிட்க் சர்வதேச வாழ்க்கை வரலாறு மையம் மற்றும் பல சர்வதேச நீலப்புத்தகங்ள் இவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சேர்த்துள்ளன.

பெய்ஜிங் சியேஹெ மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற ஜெங் சியௌ இங் உயிரியல் துறை மற்றும் ஜின்லிங்கில் பெண்கள் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் படித்தார். 1948இல் இவர் விடுவிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று கலை ஒத்துழைப்பில் வேலை செய்ததுடன் 1952இல் மத்திய இசைப் பாதுகாப்பகத்தில் தொகுத்தலைக் கற்றார். 1955இல் இவர் குழு இசை நடத்துவதை கற்பதற்கும் அவருடைய படிப்பை தொடர்வதற்கும் சோவியத் ஒன்றியத்தில் உள்ள தேசிய ச்சைகோவ்ஸ்கி இசை பாதுகாப்பு மையத்தின் இசை நடகம் மற்றும் குவு இசைப் பள்ளியில் சேர்ந்தார். 1962இல் இவர் ஒரு பெரிய வெற்றியாக இருந்த "ரோஸ்கா" என்ற இத்தாலிய இசை நாடகத்தை மாஸ்கோ இசை நாடகத்தில் நடத்தி மாபெரும் வெற்றி பெற்றார். வேட்கையுடனும் ஆனால் துல்லியமாகவும் இது இருந்தது. கலைநயத்தைத் தூண்டும் வகையில் இசை நாடகம் நடத்திய இவர் சீனாவில் சிறந்த நடத்துனராக அங்கீகரிக்கப்பட்டார்.

1978இல் இருந்து இவர் "வழிகாட்டும் தெய்வம்" "ஒரு நூறாவது மணமகள்" "விழுந்த பெண்மணி" "சூரிய அஸ்தமனத்தில் கொக்கு" "கார்மென்" "லாஸ் பொடஸ் டி பிகரோ" "சீமாட்டி" "பார்பிரியரே டிஸ்விகலியா" போன்றவற்றை உள்ளடக்குகின்ற பல முக்கியமான தேசிய நிகழ்ச்சிகளை நடத்தினார். இவர் தேசிய வாத்தியக் கோஷ்டி, ஷங்காய் Philharmonic வாத்தியக் கோஷ்டி, சீன வானொலி ஒலிபரப்பு வாத்தியக் கோஷ்டி, தேசிய இசை நாடகம் மற்றும் ஏனைய வாத்திக் கோஷ்டிகளுடன் கூட்டுறவை ஏற்படுத்தினார். அவருடைய நடத்துதலின் கீழ் உள்ள சில நாடகங்கள் ஒலிப்பதிவு நடாக்களாகவம் குறுந்தகடுகளாகவும் பதிவு செய்யபட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வழங்கப்பட்டன. இவை ஒரு நூறாவது மணப்பெண், எளிமையின் பாடல், கார்மென், அய்கோலி மற்றும் ஏனைய புகழ்வாய்ந்த ஐரோப்பிய இசை நாடகங்கள் அதே போன்று பகனினி முதல் பரிசை வென்ற வண்ணாத்தில் பூச்சிக் காதலர்கள் லயலின் இசைக் கச்சோரி மற்றும் ஏனைய சீன நாடகம் மற்றும் இன்னிசை வேலைகள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

ஜெங் சியௌ இங் சீனாவில் நடத்துதலில் அனுபவமிக்க பேராசிரியர்களில் ஒருவராவார். இவரைப் போன்று இவருடைய மாணவர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, செக்கோஸ்லோக்கியா, போர்த்துக்கல் போன்ற நாடுகளில் நடத்துனர் போட்டிகளில் உயர்ந்த வெற்றி பெற்றுள்ளனர். சில மாணவர்கள் சீனாவிலும் உலகிலும் தனித் திறமைமிக்க நடத்துனர்களாக வந்துள்ளனர். மேலதிகமாக அவர் இசைக்கான சமூக செயற்பட்டில் ஒரு ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அவர் ஏறத்தாழ ஒரு ஆயிரம் தடவைகள் இருநூறு ஆயிரத்துக்கு மேற்பட்ட நேரடி பார்வையாளர்களுடன் பொது மக்களுக்கு இசை அறிவை பிரபலியப்படுத்தினார். 1980இல் இருந்து ஜெங் சியௌ இங் ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, பிந்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம், அயர்லாந்து மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று Philharmonic கச்சோரிகளை நடத்தி, சர்வதேசக் கலை விவாக்களில் பங்கு பர்றி இசை நாடகங்களை நடத்தியதுடன் விரிவுரைகளை ஆற்றியுள்ளார். இவர் முதலாவதாகவும் அதே போன்று தொடர்ச்சியாவும் சர்வதேசப் புகழ்பெற்ற நாடகங்களுக்காக அழைக்கப்படும் சீன நடத்துனராக இருக்கிறார். இவர் சீமாட்டி வண்ழாத்தி பூச்சி, கார்மென் மற்றும் ல போவெமெ ஆகியவற்றை நடத்துவதற்கு ஆறு தடவைகள் பின்லாந்து மற்றும் சுவிஸ்லாந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவர் பொது மக்களிடமிருந்து உயர் பாராட்டுப் பெற்ற 60 மேற்பட்ட மேடையேற்றங்களைச் செய்துள்ளார்.

[மகிழ்வதற்கான இசை]: 《தைவான் நடனம்》

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040