|
![]() |
கு பிங்சு
கு பிங்சு சிறந்த சீன நடத்துனர்களில் ஒருவர். இவர் 1955இல் மத்திய இசை பாதுகாப்பு மையத்தின் இளம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன் 1958இல் இந்தப் பள்ளியின் ஒரு பட்டப்படிப்பு மாணவனாக வந்ததுடன் வாத்திய இசையில் சிறப்பாக்கப்பட்டார். 1959இல் இவரின் சிறந்த செயல்பாட்டினால் இவர் மேற்படிப்புக்காக செக் ஒபோஎ இன் தொழில்சார் வகுப்புக்கு தெரிவு செய்யப்பட்டார். 1963இல் இவர் பல்வேறு சிறப்புக்களுடன் இந்த வகுப்பில் இருந்து பட்டதாரியானார். இவர் பின்பு மத்திய வாத்தியக் கோஷ்டியின் இன்னிசை வாத்தியக் குழுவில் சேர்ந்து ஒபோஎ இசைப் பவராகச் சேர்ந்தார்.
கு நிரந்தர நடத்துனர் மற்றும் சீனாவின் ஏழ தேசிய அமைப்புக்களின் கலை இயக்குனராகப் பதவி ஏற்றார். இவை மத்திய வாத்தியக் கோஷ்டி, ஷாங்காய் பெய்ஜிங் இசை நாடக அரங்கு, பெய்ஜிங் பீக்கிங் இசை நாடக அரங்கு, மத்திய அரங்கு, கீழைத் தேசப் பாடல் மற்றும் நடனக் குழு, மத்திய பாலே நடனக் குழு, நாட்டார் இசையின் மத்திய வாத்தியக் குழு மற்றும் பலவற்றை உள்ளடக்குகின்றது.
முன்பாக இவர் தொகுத்தல் மற்றும் பிரமாண்டமான ஒத்திகையான ஷா ஜியா பாங் மற்றும் நவீன பீக்கிங் இசை நாடகமான கொடூரமான புலிகளின் மலையின் சாமர்த்தியமான ஆதிக்கம் மற்றும் குக்கூட பறவையின் மலை போன்றவற்றிலும் பங்குபற்றினார். இது சீன நாடகக் கலை வரலாற்றில் இசைக் கருவிகளையும் மற்றும் சீன நாட்டிசையின் Aria போன்றவற்றுடன் இன்னிடையை ஒன்றாக இணைப்பதற்கு ஓர் மூலமாகவும் மற்றும் அபூர்வமான வளர்ச்சியாகவும் இருந்தது.
நடத்துதல் கலையில் குவினுடைய சிறந்த சாதனை காரணமாக சீனக் கலாச்சார அமைச்சு "சிறந்த நடத்துனர் விருதை" வழங்கியது. இவர் 11வது ஆசிய விளையாட்டுக்களின் நிறைவு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் கலை விருந்தளித்து புகழ் பெற்றார். 1995இல் சீன இசைத்தட்டு நிறுவனத்தால் "தங்க இசைத்தட்டு விசேட நடத்துதல் பரிசு" விருதைப் பெற்றார்.
குவினுடைய நடத்துதல் பண்புகளாக சரியான நேரம் மற்றும் எளிய உள்ளுணர்வு அசைவுகள் உள்ளன. இவர் சிறப்பாக பங்கேற்புக் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் இதனால் இறுதியில் நடத்து மற்றும் கலைஞர், இசை மற்றும் பார்வையாளர் இடையே உள்ள தொடர்பினால் ஒரு மனதை உருக்கும் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார். சீனப் பெருநிலப்பரப்பில் பிலிபஸ் நிறுவனம் வழங்கிய முதல் மூன்று ஒலிப்பதிவுகளில் இவர் நடத்தியது ஆகும். இவருடைய பெயரைக் குறித்து நிற்கும் படைப்புக்கள் சிவப்பு மாளிகையின் கனவுகள், எனது வைப்பாட்டியின் பிரிவு, சிவப்பு விளக்கு எழுச்சி, பேரரசரரின் நிழல் போன்றவற்றை உள்ளடக்குகிறது. குவினுடைய இலக்குகளில் ஒன்று சீன நாட்டார் இசையின் உருவாக்கத்தை சர்வதேசமட்டத்திற்கு எடுத்துச் சென்றதாகும். இது நாட்டார் இசை நடத்துதலுக்கு அவருடைய அண்மைக்கால பங்களிப்பாக இருக்கிறது.
1999இல் இவர் மத்திய தேசிய வாத்தியக் கோஷ்டியை அமெரிக்காவின் 18 நகரங்களுக்கான பயணத்தில் தலைமை தாங்கிச் சென்றார். இவர் சர்வதேச தர செல்லோ கலைஞரான மா யோ யோவுடன் கர்னீஜி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட வசந்த காலக் கனவு செல்லோ கச்சேரிக்கும் ஒத்துழைத்து முன்னர் இல்லாத வெற்றியை அடைந்தார்.
1997இல் இருந்து 2000 வரை இவர்சிங்கப்பூர் சீன வாத்தியக் கோஷ்டியில் முதல்தர இசை மேற்பார்வையாளராகவும் மற்றும் நடத்துனர் அதிபராகவும் கடமை ஏற்றார். இவருடைய வேலைக் காலத்தில் இவர் பெய்ஜிங், ஷாங்காய், சியா மென் மற்றும் தைவான் போன்ற நகரங்களில் வாத்தியக் கோஷ்டியை மேடையேற்றுவதற்கு தலைமை தாங்கிச் சென்று இருக்கிறார். எல்லா மேடையேற்றங்களும் உயர்ந்த வெற்றியை அடைந்தன.
[பாராட்டுதலுக்கான இசை]: 《போர் வீரர்களின் நடனம்》
|