• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசைக் குழு நடத்துனர்கள்]

பெங் சியுவென்

பெங் சியுவென், கு பெய்யில் பிறந்த சீன நடத்துனரும் தொகுப்பாளரும் ஆவர். இவர் சீன நாட்டார் இசையில் வல்லவர். சீன ஒலிபரப்பின் தேசிய வாத்தியக் கோஷ்டியின் தலைமை நடத்துனராகவும் இருக்கிறார்.

பெங் சியுவென் எர்ஹு, பலூன் கிட்டார் போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகளை இசைக்க சிறுவயதில் இருந்தே கற்றார். 1949இல் ்வர் சிறப்பு வணிக பயிற்சிப் பள்ளியில் பட்டதாரியாகி, 1950இல் சொங்ச்சிங் தேசிய வானொலியில் வேலைக்கு சேர்ந்தார்.

1952இல் பெங் சியுவென் மத்திய ஒலிபரப்பு தேசிய வாத்தியக் கோஷ்டிக்கு நடத்துனர் மற்றும் தொகுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார். எல்லாப் பிரிவுகளின் முயற்சிகளுடன் அவர்கள் சீன தேசிய இன்னிசை வாத்தியக் கோஷ்டியின் மூல அமைப்பை உருவாக்கினார்கள்.

1957இல் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ஆறாவது உலக இளைஞர் கலைப் போட்டியில் "வசந்தகால ஆற்றின் நிலா வெளிச்சம்" என்ற தேசிய வாத்தியக் கோஷ்டி நிகழ்ச்சி பெங் சியுவென்னினால் நடத்தப்பட்டது. "ஆசை வெறியில் நடனமாடும் தங்கப் பாம்புகள்" தங்கப் பரிசை வென்றது.

1981இல் இவர் ஹாங்காங் வாத்தியக் கோஷ்டியினால் ஒரு கௌரவ நடத்துனராக அழைக்கப்பட்டார். இதே வருடத்தில் இவர் சீன வானொலி கலைக் குழுவில் ஒரு நாட்டுப்புற இசைக் குழுவின் கலை வழிகாட்டியாக வந்தார். ஒரு வருடத்திற்குப் பின்பு இந்தக் குழு ஹாங்காங்கில் நிகழ்ச்சி நடத்தச் சென்றது.

1983இல் பெஹ் சியுவென் சீன வானொலி கலைக் குழுவின் நாட்டார் இசை பிரிவுக்குத் தலைவகானார்.

பெங் சியுவென்னின் நடத்துதல் பாணி இசைக்குள் மனித உணர்வலைகளை எழுப்புவதாக இருக்கிறது. இவரின் நடத்துதலின் கீழ் சீன வானொலி கலைக் குழாமின் நாட்டார் இசைக் குழு ஓர் உயர் நிலையை அடைந்தது. இது சீனாவில் உயரிய தேசிய வாத்தியக் குழுவாக ஆனது.

பெங் சியுவென் சீன நாட்டார் இசைக்குப் பெரும் பங்களிப்புச் செய்தார். இவர் "வசந்த கலை நதிக்கு மேலாக நிலா வெளிச்சம்" "நீரின் மீது நிலாவின் பிரதிபலிப்பு" "யௌ இன நடனம்" "பௌர்ணமியும் மலர்கின்ற மலர்களும்" ஏனையவை போன்ற தொகுப்புக்களை உருவாக்கினார். இவர் சீன மரபு வாத்தியக் கருவிகளுடன் பீதோவென்னின் "ஏதென்ஸ்சின் வீழ்ச்சி" டிபுஸ்ஸியின் "மந்தாரம்" போன்ற வெளிநாட்டு இசைத் தொகுப்புக்களைக் கலப்பதற்கு முயர்சித்தார்.

1980க்கு பின்னர் பெங் சியுவென் சீன நாட்டார் இசையின் வகைகளை சிறப்பித்த பல பிரமாண்டமான நாட்டார் தொகுப்புக்களை உருவாக்கினார்.

1996 டிசம்பர் 18இல் பெங் சியுவென் பெய்ஜிங்கில் இறந்தார்.

[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《விலகிப் போரும் நல்ல நண்பர்கள் பாட்டு》


1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040