சூரியகோவில்
மிங், சிங்வம்ச பேரரசரால் 1530 ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் பெய்ஜிங் நகரத்தின் செளவ்யாங் மாவட்டத்தில் உள்ள ஜிங்குவாமன் பகுதியில் உள்ளது.பேரரசர் உலகத்திற்கே ஒளியை வழங்கும் சூரிய கடவுளுக்கு வழிபாடுகள் செய்து விளைந்த பொருள்களையும், விலங்குகளையும் பலியிட்டு இறைவனுக்கு படையலிடுவது வழக்கம். பேரரசர் வழிபட்ட அந்த பெரியபலிபீடத்தை மட்டும் சுற்றி சுவர் எழுப்பிபாது காத்து வருகின்றனர். கடவுளுக்கு படையலிட என்றே இங்கு தனிதனி பெரிய பெரியபாத்திரங்களும், புனித தன்மையை போற்றும் சமையலறையும் உள்ளது. நாம் உள் நுழைந்த உடனே நடுநாயகமான சுவற்றில் சூரிய கடவுளுக்கு படையலிடும் சீன கண்னை கவரும் ஓவியம் இருக்கிறது. இந்த பூங்காவை சுற்றிலும் தாமரை குளங்கள் இருக்கின்றது. பேரரசர்கள் வசந்தகாலத்தில் சூரியனுக்கு வழிபாடுகள் செய்து வந்தார்கள்.
பழமையின் காரணமாக கோவில் இடிக்கப்பட்டு பூங்காவாக உருமாற்றம் பெற்றுள்ளது. பூங்காவால் சூழப்பட்டிருக்கும் இந்த கோவில் "ர"தான் பார்க் என்று அழைக்கப்படுகிறது. "ர" என்றால் சீனத்து மொழியில் உஷ்ணம் என்று பெயர். பொதுமக்கள் இந்த பூங்காவை, உடற் பயிற்சிகள் செய்யவும், குழந்தைகள் விளையாடும் இடமாகவும் பயன்படுத்துகிறார்கள்.