நிலவுக்கோவில்.(சந்திரன்கோவில்)
ஷியுயே என்று சீன மொழியில் அழைக்கப்படும் இந்த நிலவு கோவில் மிங், சிங் வம்ச பேரரசர்களால் கட்டப்பட்டது. மிங் (1368-1644), சிங் (1644-1911) வம்ச பேரரசர்கள் சந்திரனுக்கு வழிபட்டு, பலியிட்டு அர்பணிக்கவும் இந்த கோவில் கட்டப்பட்டது. மக்கள் இலையுதிர்காலத்தில் நிலவுக்கு வழிபாடுகள் செய்து வந்தார்கள். பேரரசர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும்; ஆண்டின் மற்ற நேரங்களில் நாட்டின் சேனாதிபதிகள்ந்தழிபாட்டை ய்துவந்தனர். வுக்கு மட்டுமல்லாமல் நட்சத்திரங்களையும் வழிபட்டு படையலிட்டார்கள் வட்டவடிவ பெரிய பலிபீடம். நான்கு பக்கங்களை சுற்றிலும் 6 படிகளை கொண்ட பாதைகளும், நான் குபக்கசுவர்களில் கல்வாயில்களும் இருக்கிறது. இங்குள்ள ஜீவு மாளிகையில் தான் பேரரசர் சடங்குகள் முடிந்தவுடன் தனது ஆடைகளை மாற்றிகொள்ளவும் ஓய்வெடுக்கவும் இந்தமாளிகையை பயன்படுத்தினார்.
இங்கு சீனத்து பாரம்பரிய ஓவியங்கள் இந்த சுவர்களில் வரையப்பட்டுள்ளன. வழிபாடு நடத்துவதற்கு தேவையான பொருள்களை வைக்க ஒரு இடமும், சமையல் செய்வதற்கு சமையல் அறையும், சுத்தம் செய்வதற்கு ஒரு கிணறும் உள்ளது. வடக்கு புறத்தில் இரண்டாவதுதளத்தில் ஒரு பெரிய பித்தளைமணியும் இருக்கிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த இடத்தில் ஒரு பெரிய வராண்டா இருக்கிறது. சுற்றிலும் மரங்கள், நடுவில் குளம் மக்கள் எல்லோரும் இந்த வராண்டாவில் ஓய்வெடுத்து கொண்டும், புத்தகம்படித்து கொண்டும், குழந்தைகள் விளையாடி கொண்டும், சில குழந்தைகள் நடுவில் இருக்கும் குளத்தில் மீன்பிடித்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த இடத்தின் முழு அழகைரசிப்பதற்கு பக்கத்தில் உள்ள மலை குன்றில் ஏறி இந்த கோவிலுடன் கூடிய ஏரி, மற்றும் பூங்காக்களை ரசிக்கலாம். இரவு நேரங்களில் உட்கார்ந்து நிலவைதரிசிக்க ஏற்றார் போல குட்டி குட்டி கற்களாலான இருக்கைகள் உள்ளன. மரங்களுக்கிடையே தெரியும் நிலவை ரசித்து தரிசித்து மகிழ்கின்றனர்மக்கள்.