சீனா, 56 தேசிய இனங்கள் இடம்பெறும் பெரிய குடும்பமாகும். சீனாவில் ஹான் இனத்தைத் தவிர, 55 சிறுபான்மை தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்த 55 சிறுபான்மை தேசிய இனங்களில் ச்சுவான் இனத்தின் மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. ச்சுவான் இன மக்கள், சீனாவின் குவாங் சி ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம், யூன்னான் மாநிலம், குவாங் துங் மாநிலம், குவெய் சோ மாநிலம் ஆகிய பிரதேசங்களில் முக்கியமாக வாழ்கின்றனர். நீண்டக்கால வரலாற்றுப் போக்கில், சீனாவின் இதர சிறுபான்மை தேசிய இன மக்களைப் போல், விவகமான ச்சுவான் இன மக்கள், ஓளிமயமான பண்பாடுகளை உருவாக்கி வருகின்றனர். ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் கலை, ச்சுவான் இனப் பண்பாடுகளில் ஒன்றாகும்.
சீனாவின் மிகவும் புகழ்பெற்ற நான்கு சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பங்களில் ஒன்றான ச்சுவாங் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி, சீனாவின் குவாங் சி ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசப் பண்பாட்டின் செல்வமாகும். பருத்தி அல்லது பட்டு நூல்களால் பின்னப்படும் தலைசிறந்த கைவினைப் பொருட்கள், உயிரூட்டமுள்ள உருவங்களையும், பல்வகை வண்ணங்களையும் கொண்டுள்ளன. ச்சுவான் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி மூலம், ச்சுவாங் இன மக்களின் நம்பிக்கையார்வமும், எதிர்கால வாழ்க்கை மீதான சிறந்த எதிர்பார்ப்பும் வெளிப்படுத்தப்படுகின்றன. இது, ச்சுவான் இனப் பண்பாட்டைக் கையேற்றும் "உயிர் வாழும் புதை படிவமாக" மாறியுள்ளது. 2006ஆம் ஆண்டு, குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சிங் சி மாவட்டம் விண்ணப்பித்த "ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பம்", சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.