• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பம்
  2013-06-13 09:48:21  cri எழுத்தின் அளவு:  A A A   

இது பற்றி சிங் சி மாவட்டத்தின் பண்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திங் ஹோங் யுன் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். ச்சுவான் இனப் பண்பாட்டுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பம், சிங் சி மாவட்டத்தின் பண்பாட்டுச் செல்வமாகும். இத்துணி சித்திர வேலைப்பாடு பண்பாட்டை படைப்பது, நாட்டுப்புறப் பழக்க வழக்கம் மற்றும் கைவினை தொழில் திறனின் தனிச்சிறப்புத்தன்மை, ஆர்வம் ஊட்டும் பண்பு, நடைமுறைகளை வெளிகாட்டும் பண்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ச்சுவான் இன சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட குவாங் சி சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் கலை, சீனாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையிலுள்ள ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது.

சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி, நீண்டக்கால வரலாறுடையது. குவாங் சி குவெய் காங்கின் லோப்வானில் உள்ள ஹான் வம்சக் கல்லறையில் கண்டறியப்பட்ட எஞ்சியச் சித்திர வேலைப்பாட்டுடைய துணி, ச்சுவாங் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னலின் ஆரம்ப காலமாக கருதப்படுகிறது. வட சுங் வம்சக்காலத்தில், பேரரசருக்கு வழங்கப்பட்ட சிச்சுவானின் மிக புகழ்பெற்ற நான்கு துணி வகைகளில், ச்சுவான் இன சித்திர வேலைப்பாட்டுடைய துணி ஒன்றாகும். மிங் வம்சத்தின்போது, ச்சுவான் இன சித்திர வேலைப்பாடு மென்மேலும் பரவி விட்டது. அப்போது இத்துணி பின்னல் நுட்பம் மேலும் தலைசிறந்ததாக மாறியது. சிங் வம்சத்தின் இறுதியில் ச்சுவான் இன சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் வீழ்ச்சியடையத் துவங்கியது. புதிதாக தோன்றிய நெசவு பொருட்கள் அதனை பாதித்தன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040