ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பம், ச்சுவான் இன மகளிர் தேர்ச்சி பெற வேண்டிய கைவினை தொழில் நுட்ப திறனாக இருந்தது. ச்சுவான் இன சித்திர வேலைப்பாடுகளுடைய துணி, சுவான் இன மக்களின் அன்றாட வாழ்க்கை பொருளாகவும், அலங்காரப் பொருளாகவும் இருக்கிறது. ச்சுவான் இன சித்திர வேலைப்பாடுகளை பின்னுவதற்கு, பாரம்பரிய சிறு ரக மரக் கருவி பயன்படுத்தப்பட்டது. உருவங்களைப் பின்னிட இக்கருவியில் மலர் கூடை என்ற பொருள் பொருத்தப்பட்டது. மலர் கூடை இக்கருவியின் தனிச்சிறப்பு மிக்க பகுதியாகும். சிங் சி மாவட்டத்தின் ச்சுவான் இன சித்திர வேலைப்பாடு துணி பின்னல் ஆலையின் தலைவர் Chen Yeயின் அறிமுகத்தின்படி, ச்சுவான் இன சித்திர வேலைப்பாட்டு துணி பின்னலின் வளர்ச்சிப் போக்கில், இத்துணியின் வண்ணம், ஒரே வகை என்பதிலிருந்து பல வகைகளாக அதிகரித்துள்ளது. இத்துணியில் பின்னப்பட்ட எளிய உருவங்கள், சிக்கலான உருவங்களாக மாறியுள்ளன. முந்தைய 20க்கு அதிகமான வகைகள் மட்டுமே என்பது மாறி 50க்கு அதிகமான உருவங்களை கொண்டுள்ளதை தவிர, கடந்த சில ஆண்டுகளில், "குய் லின்னின் இயற்கைக் காட்சி", "தேசிய இன ஒற்றுமை" உள்ளிட்ட 80க்கு அதிகமான தனிச்சிறப்பு வாய்ந்த புதிய படங்கள் தோன்றியுள்ளன. முன்பு, ச்சுவாங் இன சித்திர வேலைப்பாடு, மெத்தை உறை, படுக்கை விரிப்பு, மேசை துணி ஆகிய பொருட்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. தவிர, இது திருமணப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது அல்லது அரசக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. தற்போது சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டுடைய துணி, சுவர் அலங்காரப் பொருளாகவும், சுற்றுலா நினைவுப் பொருளாகவும் கிடைக்கின்றன.