கடந்த சில ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிங் சி மாவட்டக் குழு மற்றும் அரசின் பெரும் ஆதரவுடன், ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி தயாரிப்பு செவ்வனே வளர்ந்து வந்துள்ளது. ச்சுவாங் இனச் சித்திர வேலைப்பாட்டு துணிப் பொருட்கள் பல்வகை கைவினைப் பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை, ஹாங்காங், மக்கெள், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிங் சி மாவட்டத்தின் ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் ஆலை பக்குவமாக இயங்கவில்லை. குறைந்த உற்பத்தி ஆற்றல், பின்தங்கிய அலுவல் கருத்து, அலுவல் மாதிரி ஆகிய காரணங்களால், ச்சுவாங் இனச் சித்திர வேலைப்பாட்டுத் துணிச் சந்தை, விறுவிறுப்பற்ற நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது என்று சிங் சி மாவட்டத்தின் பண்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திங் ஹோங் யுன் தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தீர்க்க, ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி ஆலை, ச்சுவாங் சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னல் நுட்பத்தை ஆராய்ந்து, புத்தாக்கி, முன்பு உற்பத்தியான துணி அளவுக்கு உற்பத்தி அளவை உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்ல, காலத்தின் வளர்ச்சி மற்றும் சந்தை தேவைக்கிணங்க, புதிய உருவங்கள் மற்றும் சித்திர வேலைப்பாடுகளை அதிகரித்து, பொது மக்களின் வாழ்க்கை தேவையை நிறைவு செய்து, பல்வகை வழிகளால் புகழை உயர்த்தியுள்ளது என்று திங் ஹோங் யுன் தெரிவித்தார்.