• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சுவான் இனச் சித்திர வேலைப்பாட்டு துணி பின்னல் நுட்பம் 2வது பகுதி
  2013-06-18 08:46:39  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த பாரம்பரிய நாட்டுப்புறக் கைவினைத் தொழில் நுட்பத்தை மேலும் நன்றாக பாதுகாக்கும் பொருட்டு, சிங் சி மாவட்டத்தின் தொடர்புடைய வாரியங்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டு, பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளன. 2005ஆம் ஆண்டு முதல், ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி பற்றிய ஆய்வுப் பணி முழுமையாக நடைபெற்று வருகிறது. ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி தோன்றி, வளர்ந்த வரலாறு, ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி வகைகள், அதன் பின்னல் நுட்பங்கள் முதலியவற்றை பலரும் அறிய வந்துள்ளார். சித்திரத் வேலைப்பாட்டுத் துணி பின்னல் பணியாளர்களின் திறனை உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி தயாரிப்பு ஆலை, போட்டிகளை நடத்தி வருகிறது. ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி பின்னலில் சிறந்த திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு, ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி கைவினை தொழில் நுட்பப் பள்ளி நிறுவப்பட்டது. தவிர, சிங் சி மாவட்டத்தின் பண்பாட்டு வாரியம் உள்பட பல வாரியங்கள் ஆண்டுதோறும் ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டு துணி ஆலைக்கு குறிப்பிட்ட நிதியுதவியை வழங்கி வருகின்றன. சிங் சி ச்சுவாங் இன சித்திர வேலைப்பாட்டுத் துணி பண்பாட்டு வளர்ச்சி மற்றும் பரவல் கூட்டு நிறுவனத்தை உருவாக்க சிங் சி மாவட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இக்கூட்டு நிறுவனம், திறமைசாலிகள் ஏற்பாடு, தொழில் நுட்ப வழிகாட்டுதல், உற்பத்தி பதனீடு, பண்பாட்டுப் பரவல், சந்தை விற்பனை, சுற்றுலா சேவை ஆகிய கடமைகளுக்குப் பொறுப்பேற்கிறது. இதன் மூலம் இம்மாவட்டத்தின் ச்சுவாங் இன வேலைப்பாட்டுத் துணி பண்பாடு தொழில்மயமாகும் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040