ஒலிபரப்புக்கான அறிவிப்பாளரையும், மொழிபெயர்ப்பாளரையும்
பயிற்றுவிக்கும் பணியை வலுப்படுத்தும் பொருட்டு, பின்னர், பெய்ஜிங் ஒலிபரப்புக் கல்லூரியிலிருந்து மேலும் சில மாணவமாணவிகள் தமிழ்ப் பிரிவின் தலைவராகம் இருந்த தோழர் வாங் பாவ்ஷு, பிரபல தமிழ் அறிவிப்பாளர் ஹலுமினா என்னும் செங் ருய்ஃபாங் அம்மையார், முன்னாள் தமிழ்ப் பிரிவு துணைத் தலைவரான ட.தேவி என்னும் சென் ஜிஃபாங் அம்மையார், மூத்த மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் சென் ஜின்சிங் அம்மையார், முதலியோரும் இடம் பெற்றனர்.
மாணவர்களாகிய நாங்கள், நாள்தோறும் மொழிபெயர்ப்புப் பயிற்சியிலும், செய்தி மற்றும் சிறப்புக் கட்டுரை வாசிப்புப் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தோம். இலங்கையைச் சேர்ந்த நிபுணர் மாதகல் கந்தசாமி அவர்கள், தமிழ் ஒலிபரப்புப் பயிற்சிப் பணிக்கு வழிகாட்டினார். தாடி மீசை நிபுணர் எனப் பெயர்பெற்ற கந்தசாமி அவர்களை ஆசிரியரி என்று நாம் அனைவரும் அழைப்பது வழக்கம்
அவர் எங்கள் மொழிபெயர்ப்பையும் உச்சரிப்பையும் திருத்தி வந்தார். ஆசிரியர் கந்தசாமி அவர்களின் உதவியின்றி, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, முறைப்படி தொடங்கியிருக்க முடியாது என்று கூறினால் மிகையாகாது.
அறை ஆண்டு கடும் முயற்சிக்குப்பின், 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள், சீன மக்கள் குடியரசின் தமிழ் ஒலிபரப்பு, அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
தொடக்கக் காலத்தில் பல இன்னல்களுக்கு இடையே ஒலிபரப்புப் பணியில் ஈடுபட்டு வந்தோம். அப்போது மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாத தமிழ் அகராதிகள் எங்களுக்கு இல்லை. படிப்பதற்குத் தமிழ் நூல்களும் செய்தித் தாள்களும் இல்லை.
மற்றபடி, தமிழ் மொழி தட்டச்சுப் பொறிகளும் இல்லை. எல்லா செய்திகளும் சிறப்புக் கட்டுரைகளும் எங்கள் கைகளாலேயே எழுதப்பட்டன. கடின வேலை தான்.
அப்போழுது, நாங்கள் ஒலிப்பதிவு அறைக்குச் செல்வதற்கு முன், செய்திகள் என்றாலும் சரி,
சிறப்புக் கட்டுரைகள் என்றாலும் சரி, ஆசிரியர் மாதகல் கந்தசாமி அவர்களிடம் சென்று, அவற்றை வாசிப்பது வழக்கம். வாசிப்பில் பிழைகள் இருவ்தால், அவர் உடனே சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்வார். எங்கள் உச்சரிப்பைச் சரிப்படுத்தி வாசிக்கக் காடடுவார். ஒரு கட்டுரையைக் குறைந்தது 5.6 முறையாவது ஒலிப்பதிவு செய்ய வேண்டும். அதாவது ஆசிரியர், எங்கள் ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு, மனநிறைவு அடையும் உரைதான், அது ஒலிபரப்ப அனுமதிக்கப்படும்.
மேலும், ஆசிரியர் கந்தசாமி, எங்களது தமிழாக்கத்தைச் சிவப்புப் பேனாவால் திருத்துவார். திருத்தி முடிந்த பின்னர், தமிழாக்கத் தாள்களில் ஒரே சிவப்பு மயம் காணப்படும். அவற்றைப் பார்ப்பதற்கு மிகவும் வெட்கப்பட்டோம். எனினும், அந்தச் சிவப்புமயத் தாள்களை மூத்த தலைமுறைப் பணியாளர்களாகிய நாங்கள் கசிக்கிக் கொண்டு குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்துவிடவில்லை. மாறாக, பக்கம் பக்கமாகத் திரட்டி, அவ்வப்போது ()(5)
வெளியே எடுத்துப் பார்த்து, எனது தவறு என்ன? ஏன் ஆசிரியர் இவ்வாறு திருத்தினார் என்று ஆய்வு செய்து வந்தோம். முயற்சி திருவினையாக்கும். படிப்படியாக, தமிழாக்கப் பணியிலும் பெரும் முன்னேற்றம் கண்டோம்.
சீனத் தமிழ் ஒலிபரப்பின் தொடக்கக் காலத்தில், நேயர்களிடமிருந்து வந்த கடிதங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவ்வப்போது, இந்தியாவிலிருந்து சில கடிதங்கள் வந்தால், ஏன் உங்கள் தமிழ் ஒலிபரப்பில் அதிக அளவில் வடமொழி் சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நேயர்கள் குறை கூறுவார்கள்.
சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, நடைமுறைக்கு வந்தபின், தமிழ்ப் பிரிவிலும் புத்தம் புதிய நிலைமை காணப்பட்டுள்ளது.