இனி, சீனத் தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து, சில நேயர்களை மேற்கோள் காட்டி எடுத்துக் கூறுகிறேன்.
உலகில் அன்றாடம் இடம்பெறும் தமிழ் ஒலிபரப்புகளில் நிகழ்ச்சிகளின் தரத்தில் சிறந்து விளங்குவது சீன வானொலியே அன்றி, BBC வானொலியல்ல என்று அனைத்திந்திய சர்வதேச தமிழ் ஒலிபரப்பு நேயர் சங்கத்தின் தலைவர் சண்முகவேல் ஒரு கூட்டத்தில் கூறியதாக, இந்திய நேயர் ஹாக் தமது மடலில் சுட்டிக் காட்டினார்.
இந்திய நேயர் ஆ. சந்தனம் தம் மடலில் வருமாறு கூறினார்:"உலகில் பல நாடுகள் தமிழ் ஒலிபரப்பு நிகழச்சிகளை வழஙகிய போதிலும், நேயர்களின் முன்மொழிவுகள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, நேயர்கள் கடிதங்களை எழுதுவதை ஊக்குவித்து, பல்வகை பொது அறிவுப் போட்டிகளை"
நடத்திச் சிறந்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் முதலிடம் பெறுவது சீன வானொலியே இதற்காக, நேயர்களின் சார்பில் சீன வானொலிக்கு தங்கபதக்கத்தை அளிக்கிறேன். சீன வானொலிக்குத் தான். இத்தகைய தங்கப்பதக்கம் பெறத்தகுதி உண்டு என்றார் ஆ.சந்தனம்.
அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கோவிந்தன் தம் மடலில் எழுதியனதக் கேளுங்கள். "உங்கள் நிகழ்ச்சிகள் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளன. நீண்டகாலமாக, இந்தச் சிறந்த நிகழ்ச்சிகளைக் கேட்கத் தவறியமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் ஒலிபரப்பு, இந்திய-சீன நட்புறவின் பாலம். மேன்மேலும் அதிகமான இந்திய நேயர்கள், உங்கள் ஒலிபரப்பை விரும்பிக் கேட்கிறார்கள். சீன வானொலி வெற்றி பெறுவதற்குக் காரணம் இதுவே" என்றார் அவர்.
"அறிவியல் உலகம்" நிகழ்ச்சியில் இடம்பெறும் பல அறிவியல் தகவல்கள், நவீன அறிவியலின் அற்பதங்களை எடுத்துக்காட்டுகின்றன. நான் பல நாடுகளின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்டு வருகின்றேன். ஆனால், வேறு எந்த
கொழும்பு நேயர் பிரகாஷ் கூறியதாவது, "தங்கள் ஒலிபரப்பில் இடம்பெறும் 《மலர்ச்சோலை》, 《அறிவியல் உலகம்》 போன்ற நிகழ்ச்சிகள் பல புதிய சுவையான தகவல்களைத் தந்துள்ளன. சிறந்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் வேறு எந்த வானொலியும் தங்கள் வானொலிக்கு இணையாகாது. சீன வானொலி ஆயிரமாயிரம் நேயர்களைக் கவர்ந்திழுத்துள்ளது.
சீனா பற்றியும் உலகம் பற்றியும் அறிந்து கொள்வதிலும் பலதரப்பட்ட அறிவுகளைக் கற்றுக்கொள்வதிலும் எனக்கு உதவும் சிறந்த ஆசிரியர், சீன வானொலியே" என்றார் பிரகாஷ்.
இலங்கை நேயர் விஜயகுமாரன் கூறியதாவது, "சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகள் சிறந்து விளங்குகின்றன. 《நேயர் நேரம்》《அறிவியல் உலகம்》《நேயர் விருப்பம்》《செய்தித்தொகுப்பு》 போன்ற நிகழ்ச்சிகள் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளன. நான் செவிமடுத்து வரும் பல்வேறு நாடுகளின் தமிழ் நிகழ்ச்சிகளில் சீன வானொலியே தலைசிறந்தது" என்றார் அவர்.
வானொலியும் சீன வானொலிக்கு ஈடாக இல்லை. உங்கள்
வானொலி வழங்கும் பலவித சிறந்த நிகழ்ச்சிகள், நேயர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுள்ளன" என்றார் பெல்காம் நேயர் ஜி.வரதராசன்.
அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் எஸ்.செல்வன், 1993ஆம் ஆண்டு திசெம்பர் 31ம் நாள் எழுதிய மடலில் வருமாறு கூறினார்:"அன்று, சீன மக்கள் குடியரசு தலைவர் ஜியாங்சேமின் அவர்கள் நேயர்களுக்கான புத்தாண்டு வாழ்த்துரையை நான் செவிமடுத்து மகிழ்ந்தேன். சீன பொருளாதார மேம்பாட்டுக்கான அடிப்படைக் காரணத்தை தலைவர் ஜியாங்சேமின் விளக்கிக் கூறினார். சீனா, தன் மாபெரும் பொருளாதார வளர்ச்சியினால், உலகில் எல்லா நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எல்லா நாடுகளும் பிற நாட்டு மக்களின் சுதந்திர உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற தலைவர் ஜியாங்சேமின் அவர்களின் இக்கருத்தினை நான் ஆதரிக்கிறேன். அவரது உரை இந்தியாவும்
சீனாவும் கூட்டாக முன்மொழிந்த சமாதான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளை நினைவு கூர்ந்தேன். அனைத்து நாடுகளும் சமாதான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளைக் கடைப்பிடித்துச் செயல்பட்டால், உலக அமைதி நனவாவது உறுதி. சீன வானொலி நிலையம், சீன மக்களுக்கும் பல்வேறு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் பாலமாக விளங்கியுள்ளது என்று தலைவர் ஜியாங்சேமின் கூறியதைக் கேட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நேயர்களாகிய நாம், சீன வானொலியின் நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தான், மக்கள் சீனாவைப் பற்றி அறிந்து கொண்டேலம்" என்றார் எஸ்.செல்வன்.
அதே நாள், அனைத்திந்திய சீன-வானொலி நேயர் மன்றத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்ட மன்றத் தலைவர் எம்.தேவராஜா தம் மடலில் எழுதியதாவது:"இன்று, குடியரசு தலைவர் ஜியாங்சேமின் அவர்களின் பத்தாண்டு உரையைக் கேட்டு மகிழ்ந்தேன்.
உலகில், எந்த வானொலி நிலையத்தின் நேயர்களுக்கும் இத்தகைய பெருமை கிடைக்காது என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இத்தால் தலைவர் ஜியாங்சேமின் அவர்களுக்கும் சீன வானொலியின் பணியாளர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் ஜியாங்சேமின் தமது உரையில் குறிப்பிட்டது போல், கடந்த ஆண்டில் சீனா மாபெரும் முன்னேற்றம் கண்டு, பொருளாதாரத் துறையில் விரைவுமிக்க வளர்ச்சியடைந்துள்ளது. சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச தத்துவத்தைப் பின்பற்றி, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை விரைவுபடுத்துவதே, சீன மக்கள், இந்த சாதனைகளை ஈட்டியதற்குக் காரணமாகும். சீனாவில் நிலவும் அரசியல் நிலைபேறு, தேசிய இன ஒற்றுமை சமூக முன்னேற்றம் ஆகியன, சீர்திருத்த வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு நம்பகமான உறுதியை அளித்துள்ளன. அதே போல், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் முறையைக் கையாண்டால் அவையும் பெரும் முன்னேற்றம் அடையும்" என
நான் நம்புகிறேன். சீன வானொலி நிலையம் பல்வேறு நாட்டு மக்களுக்கும் சீன மக்களுக்கும் இடை நட்புறவுக்கு வலுச்சேர்ப்பதில் ஆற்றியுள்ள பங்கை தலைவர் ஜியாங்சேமின் சுட்டிக்காட்டினார்.
இது மகிவும் சரியானது. சீனாவைப் பற்றி, சீன மக்களைப் பற்றி, சீனாவின் மாபெரும் முன்னேற்றம் பற்றி, உலக அமைதி, நிலைபேறு குறித்தும், முக்கிய உலகப் பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாடு குறித்தும் சீனா ஆற்றியுள்ள பங்கு ஆகியவற்றை அறிந்து கொள்வதில் சீன வானொலித் தான், எனக்குப் பெரிதும் உதவி செய்துள்ளது என்றார் எம்.தேவராஜா.