• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பேராசிரியர் திரு.சுந்தரம்
  2013-08-03 18:41:53  cri எழுத்தின் அளவு:  A A A   

நேயர்கள், வானொலியின் கடவுள் என்பார்கள்.

நேயர்களின் நல்ல கருத்துகள், நியாயமான முன்மொழிவுகள், கொரிக்கைகள் ஆகியவற்றைச்

செவிமடுத்து, நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தினால் ஒலிபரப்புப் பணி வெற்றி வாகை சூடும் என்பது திண்ணம். இவ்வாறுதான் செய்து வந்தோம். பின்வரும் உண்மையைக் காண்போம்.

"மறு ஒலிபரப்பு வேண்டாம்" என்றும், "இரண்டு வேறுபட்ட அரைமணிநேர ஒலிபரப்புகள் வேண்டும்" என்றும் கோரிவந்த நேயர்களின் கோரிக்கையை ஏற்று, 1987ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாளன்று ஒரே மாதிரியான 2 அரைமணிநேர ஒலிபரப்புக்களை, வேறுபட்ட 2 ஒலிபரப்புக்களாக மாற்றினோம். அப்போது, சீன வானொலியில் இவ்வாறு செய்த ஒரே ஒரு மொழிப் பிரிவு என்ற பெருமை, தமிழ்ப்பிரிவே சாரும். இந்தச் சீர்திருத்தத்தைக் கண்ட நேயர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

இந்தக் காலத்தில், தமிழ் பிரிவின் தலைவராக இருந்த நான், முன்னணி நேயர்களின் முக்கிய மடல்களுக்குக் கைப்படப் பதில் மடல் எழுதி வந்தேன். காலப்போக்கில், எனக்கும் நேயர்களுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு

நல்வி வந்துள்ளது. நேயர்களும் தமது"சுந்தர அண்ணாவை" மிகவும் விரும்புகிறார்கள்.

நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தி வருவதுடன், நேயர்களும் சீனத் தமிழ் ஒலிபரப்பை விரும்பிக் கேட்கத் தொடங்கினர். இயல்பாகவே நேயர் கடிதங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் செல்வாக்கும் பெருகிவருகிறது. அப்போழுது முதல், சீன வானொலியில் தமிழ்ப் பிரிவின் கடித எண்ணிக்கை, முன்னணியில் இருந்து வந்துள்ளது. 1990 இல், நாடு தழுவிய செய்தித் துறையில் தமிழ்ப் பிரிவு முன்மாதிரிப் பிரிவு என்ற விருது பெற்று, பாராட்டப்பட்டது.

நேயர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், நேயர் நேரம், மலர்ச்சோலை, அறிவியல் உலகம், கேள்வியும் பதிலும், உங்கள் குரல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவதிலும், மொழிபெயர்ப்பில் தேவையற்ற வட மொழி சொற்களை நீக்கி, தூய செந்தமிழ்ச் சொற்களைப் புகுத்திப்

பயன்படுத்துவதிலும், தீனத் தமிழ் ஒலிபரப்பைத் தணிச்சிறப்பு வாய்ந்த ஒலிபரப்பாக மாற்றுவதிலும் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவு நிபுணரான முனைவர் ந.கடிகாசலம் அவர்கள் அரிய தொண்டு ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1991ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 24ஆம் நாள், அனைத்திந்திய சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நேயர் மன்றத்தின் 6வது மாநாடு, 10 ரோடு நகரில் நடைபெற்றது. இப்போதைய சீன வானொலி 3வது ஆசியத் துறையின் தலைவர் வாங் பாவ் ஷீ அவர்களும் தமிழ்ப் பிரிவுத் தலைவரான நானும் அழைப்பின் பேரில் இதில் கலந்து கொண்டு உரையும் நிகழ்த்தினோம்."சுந்தர அண்ணா இந்த மாநாட்டுக்கு வருகை தருவார்" என்ற செய்தியை நமது ஒலிபரப்பிலிருந்து கேட்ட போது நேயர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர். மறக்க முடியாத நிகழ்வு என்ன வென்றால், அன்று, கூட்ட மண்டபத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் நேயர்கள் மேளதாளம் அடித்து, நீ முந்தி நான் முந்தி என்றவாறு வீதியின் இரு மருங்குகளிலும் நின்று ஆரவாரம் செய்து, சீன வானொலி பேராளர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர். வீதியில் ஒரே நேயர்கள் கூட்டம். இதனால் பாதை நடக்க முடியாதபடி தடைபட்டது.

இதைக் கண்ட காவற்துறையினர் அங்கு வந்து ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. இந்தியாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 500க்கு அதிகமான நேயர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த நேயர் மன்றத்தின் செயலாளர் பரமசிவன் எங்களிடம் கூறியதாவது:"இது, இந்திய வரலாற்றில் முன்னென்றும் காணாத நேயர்கள் மாநாடு. அளவில் மிகப் பெரிய இம்மாநாட்டில் கலந்துகொண்ட பங்கேற்ற நேயர்களின் எண்ணிக்கையும் மிக கூடுதலானது. BBC, பிலிப்பின் வெரிதாள் வானொலி மற்றும் மாஸ்கோ வானொலியும் நேயர் கூட்டத்தை நடத்தியது உண்டு. ஆனால், இத்தகைய பெரிய அளவிலான கூட்டம் ஒருபோதும் நடத்தவில்லை."என்றார் பரமசிவன்.

மதியம் உணவு வேளையின் போது, எங்களது கொயொப்பம் பெற நேயர்கள் அமார் ஒரு மணிநேரம் வரை எங்களை நெருக்கமாக சுற்றி வளைத்தனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040