• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஹெனான் மாநிலத்தின் தான் செள தியாவ் ஷெங் நாட்டுப்புறப் பாடல்
  2013-09-24 09:25:21  cri எழுத்தின் அளவு:  A A A   
தான் செள தியாவ் ஷெங், சீனாவின் ஹெனான் மாநிலத்தின் தான் செளப் பிரதேசத்தில் பரவி வரும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒருவகை நாட்டுப்புறப் பாடலாகும். இந்த வகை நாட்டுப்புறப்பாடல், மேற்கு ஹான் வம்சக்காலத்தில், தான் செளவின் வடக் கடலோரத்தில் தோன்றத் தொடங்கியது. இது டான் சோ பிரதேசத்தின் பேச்சு மொழியில் பாடப்படும் ஹான் இன நாட்டுப்புறப் பாடலாகும். தான் செள தியாவ் செங், "தென் சீன இசைத் துறையின் தலைசிறந்த மலர்" என புகழ்ந்து பாராட்டப்படுகிறது. இது, நாட்டுப்புறப் பண்பாட்டின் தலைசிறந்த மரபுச் செல்வமாகவும் கருதப்படுகிறது. அதன் காரணமாக, தென் சோ, சீனப் பண்பாட்டு அமைச்சகத்தால், "சீன நாட்டுப்புறக் கலை ஊர்" என பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தான் செள தியாவ் ஷெங், ஹெனான் மாநிலத்தின் முதலாவது தொகுதி தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டுப் பாதுகாப்புத் திட்டப்பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

தான் செள தியாவ் ஷெங், பாடலும் நடனமும் ஒன்றிணையும் கலை வடிவமாகும். இது 100க்கு அதிகமான இன்னிசை பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த நாட்டுப்புற பாடலின் தாளம் இனிமையாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. இதன் வளர்ச்சிப் பரிமாணத்தில், சீனாவின் பண்டைக்கால மற்றும் தற்காலப் பாடல்கள், ஏன் வெளிநாட்டுப் பாடல்களின் தாளமும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதை காணலாம். தான் செள தியாவ் ஷெங், காலத்தின் மாற்றத்துக்கிணங்க, வளர்ச்சியடைந்து, பரவலாகி வருவதற்கு இது முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040