• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஹெனான் மாநிலத்தின் தான் செள தியாவ் ஷெங் நாட்டுப்புறப் பாடல்
  2013-09-24 09:25:21  cri எழுத்தின் அளவு:  A A A   

தான் செள தியாவ் ஷெங், கலையழகு வாய்ந்தது. இது பல கலை முறைகளை வெற்றிகரமாக பயன்படுத்தி, பொது மக்களின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் நன்றாக வெளிப்படுத்தி வருகிறது.

அதனால் உள்ளூர் மக்களிடையே பெருமளவில் பரவி வருகிறது. தான் செள பிரதேசத்தில், இது பொது மக்கள் பலராலும் மிகவும் வரவேற்கப்படும் கலை வடிவமாகும். பொது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து, அவர்களின் சிறந்த பண்புகளை வளர்க்க இது பங்காற்றியுள்ளது.

தான் செள தியாவ் ஷெங், தான் செள நாட்டுப்புற பாடல் கலை வகைகளில் ஒன்றாகும். இதுவும், தான் செள பண்பாட்டின் முக்கிய பகுதியாகும். தான் செள தியாவ் ஷெங் வளர்ச்சியடையும் துவக்கத்தில், இப்பாடல்களின் அம்சங்களில், ஆடவருக்கும் மகளிருக்குமிடை காதல் வெளிப்பாடு தான் முக்கியமாக இருந்தது. நீண்டக்கால வளர்ச்சி மூலம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பல துறைகளின் அம்சங்கள் அனைத்தும் இப்பாடல்களில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. சீனச் சந்திர நாட்காட்டியின்படி, ஜனவரி திங்கள் முதல் நாள், அதே திங்கள் 15ஆம் நாள், ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் உள்ளிட்ட நாட்டுப்புற விழா நாட்களின் போது, தான் செளவின் பல்வேறு வட்ட மற்றும் கிராமங்களில் தியாவ் ஷெங் அரங்கேற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் நாள், அதாவது சீனப் பாரம்பரிய நடு இலையுதிர் கால விழா, தான் செள தியாவ் ஷெங் விழா என குறிக்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040