• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஹெனான் மாநிலத்தின் தான் செள தியாவ் ஷெங் நாட்டுப்புறப் பாடல்
  2013-09-24 09:25:21  cri எழுத்தின் அளவு:  A A A   

தான் செள நாட்டுப்புறப் பாடல்களின் அடிப்படையில், தான் செள தியாவ் ஷெங் வளர்ந்து வருகின்றது. துவக்கத்தில், தான் செள தியாவ் ஷெங் பாடல்களில், காதல் பாடல்கள் பெரும்பாலும் இருந்தன. இளைஞர்கள் பாடல்களைப் பாடி, அவர்களது காதலரிடம் காதலைத் தெரிவித்தனர். சிங் வம்சத்தின் இறுதியில், தியாவ் ஷெங் பாடலில், அப்போதைய "கல்லூரி நாட்டுப்புறப் பாடலின்" தனிச்சிறப்பு உட்புகுந்திருந்தது. 20வது நூற்றாண்டின் 20ஆம் ஆண்டுகளில், தியாவ் ஷெங் நாட்டுப்புறப் பாடலின் அம்சங்களில், புரட்சியின் அம்சங்கள் சேர்ந்தன. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் கலந்து கொண்ட போர் காலத்திலும், விடுதலை போர் காலத்திலும், தான் செள தியாவ் ஷெங், எதிரிகளைத் தாக்கும் வலுவான ஆயுதமாக மாறியது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் 1960ஆம் ஆண்டுகளில், நீர் சேமிப்பு கட்டுமான இடங்களில் நடைபெற்ற தான் செள தியாவ் ஷெங் பாடல் போட்டிகள், தான் செள தியாவ் ஷெங்கின் வளர்ச்சியை மூன்றாவதாக உயர் நிலைக்குக் கொண்டு சென்றன.

தான் செள தியாவ் ஷெங் பாடற்குழுக்கள், சீனாவின் வூ ஹான், குவாங் செள, பெய்சிங் உள்பட இடங்களில் அரங்கேற்றியிருக்கின்றன. சீனாவின் சில திரைப்படங்களில், "மகளிர் செம்படைப்பிரிவு" எனும் பாலே நடன நாடகத்திலும் தான் செள தியாவ் ஷெங்கின் தாளத்தை கேட்கலாம். 2011ஆம் ஆண்டு, குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான் நிங் நகரில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறப் பாடல் விழாவில் தான் செள தியாவ் ஷெங் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சீன மத்திய தொலைக்காட்சி நிலையமும் பல்வேறு மாநிலங்களின் தொலைக்காட்சி நிலையங்களும், தான் செள தியாவ் ஷெங் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. 2001ஆம் ஆண்டு, ஹெனான் மாநிலத்தில், தான் செள தியாவ் ஷெங் விழா முதன்முறையாக நடைபெற்றது. தான் செள நகரிலும் அதன் புறநகரங்களிலும் சுமார் 278 பாடற்குழுக்கள் உருவாகியுள்ளன. சுமார் பத்தாயிரம் பேர் தியாவ் ஷெங் விழாவில் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040