• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஷான் துங் மாநிலத்தின் ஹெயாங் யாங்கோ நடனம்
  2013-10-08 10:15:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஷாங் துங் மாநிலத்தில் ஹெயாங் நகரம் அமைந்துள்ளது. இந்நகரைக் குறிப்பிட்டதும், "ஹெயாங் யாங்கோ நடனம்" உடனடியாக மக்களின் நினைவில் நிழலாடும். யாங்கோ என்பது, சீனாவின் பாராம்பரிய நாட்டுப்புற நடன வடிவமாகும். 583 ஆண்டுகால வரலாறுடைய ஹெயாங் யாங்கோ நடனக் கலை, தற்போது ஹெயாங் நகரின் பண்பாட்டு அடையாளமாக மாறியுள்ளது. 2007ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் நடத்திய 4வது நடனப் போட்டியில் ஹெயாங் யாங்கோ நடனக்குழு கலந்து கொண்டது. இக்குழு, சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் நடத்திய போட்டியில் கலந்து கொள்வது அதுவே முதன்முறை. அதன் தனிச்சிறப்பு வாய்ந்த கலை ஈர்ப்பு ஆற்றலால் ஹெயாங் யாங்கோ நடனம், "பார்வையாளர்களால் மிகவும் வரவேற்கப்படும் நிகழ்ச்சியாக" மாறியுள்ளது.

ஹெயாங் நகரின் பண்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் வாங் ஜின் ச்சாவின் அறிமுகத்தின்படி, ஹெயாங் யாங்கோ, ஷான் துங் மாநிலத்தில் பரவிய மூன்று யாங்கோ வகைகளில் ஒன்றாகும். பாடல், நடனம், இசை நாடகம் ஆகியவை இணைந்த நாட்டுப்புறக் கலை இதுவாகும். மிங் வம்சத்தின் துவக்கத்தில், ஹெயாங் யாங்கோ தோன்றியது. சிங் வம்சத்தின் மத்தியக் காலக் கட்டத்தில், அதன் வளர்ச்சி, உச்ச நிலையடைந்தது. ஃபெங் செங் நகர், அப்போதைய ஹெயாங் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாக இருந்தது. ஆண்டுதோறும் முக்கிய விழாக்கள் நடைபெற்ற போதெல்லாம், ஃபெங் செங்கிற்கு அருகிலுள்ள பல்வேறு இடங்களைச் சேர்ந்த கிராமவாசிகள், ஃபெங் செங்கில் ஒன்று கூட்டி, கோலகலமான வாழ்க்கையை வெளிகாட்டும் யாங்கோ நடன அரங்கேற்றத்தில் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040