• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஷான் துங் மாநிலத்தின் ஹெயாங் யாங்கோ நடனம்
  2013-10-08 10:15:09  cri எழுத்தின் அளவு:  A A A   

அதிகமான கலைக் கல்வியியலாளர்கள், அறிஞர்கள், பண்பாட்டுப் பணியாளர்கள், நாட்டுப்புற மூத்த கலைஞர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சிகளுடன், ஹெயாங் யாங்கோ மேலும் வளர்ந்து, செழிப்பாகி வருகிறது. கலைஞர்களும், அறிஞர்களு்ம, சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளும் யாங்கோ நடனத்தைக் கண்டு இரசிக்க, ஹெயாங்கிற்குச் செல்கின்றனர். ஹெயாங்கிலுள்ள துவக்கப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில், யாங்கோ நடனம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஹெயாங் யாங்கோ நடனம் பற்றிய திரைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் தயாரிக்கப்பட்டு, ஒளிப்பரப்பாகின்றன. 1983ஆம் ஆண்டு பெய்சிங் நடனக் கல்லூரி, ஹெயாங் யாங்கோவை, சீனாவின் ஹான் இனத்தின் நாட்டுப்புற நடனக் பாடநூலில் கட்டாயப் பாட அம்சங்களில் சேர்த்துள்ளது. பல போட்டிகளில், ஹெயாங் யாங்கோ தலைசிறந்த சாதனையைப் பெற்றுள்ளது. 1997ஆம் ஆண்டு, ஹெயாங் நகரம், சீனப் பண்பாட்டு அமைச்சகத்தால், சீன நாட்டுப்புறக் கலைக் கிராமம் என பெருமை பெற்றது. 2006ஆம் ஆண்டு, ஹெயாங் யாங்கோ, சீனாவின் முதலாவது தொகுதி பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தற்போது ஹெயாங் யாங்கோ சீனா முழுவதிலும் பிரபலமாகி விட்டது. யாங்கோ நடனக் கலைஞர்கள் இந்நடனத்திற்கு புதிய வழிமுறைகளை உருவாக்கினால், இந்நடனம் உலகளவில் பரவி வரக்கூடும் என்று வாங் ஜின் ச்சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

நேயர்களே, "ஷான் துங் மாநிலத்தின் ஹெயாங் யாங்கோ நடனம்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040