• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ஷான் துங் மாநிலத்தின் ஹெயாங் யாங்கோ நடனம்
  2013-10-08 10:15:09  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, ஹெயாங்கின் பத்துக்கு அதிகமான வட்டங்களில் யாங்கோ நடனம் பரவி விட்டது. ஹெயாங் பிரதேசத்தில் சுமார் 700 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 600 கிராமங்களில் யாங்கோ நடனக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், யாங்கோ நடனத்துக்கான ஆதரவை ஹெயாங் நகர அரசு வலுப்படுத்தி வருகிறது. உள்ளூர் பண்பாட்டு வாரியம், யாங்கோ நடன வழிகாட்டுக் குழுவை நிறுவியது. இவ்வழிகாட்டுக் குழு கிராமப்புறத்துக்குச் சென்று, யாங்கோ நடன அரங்கேற்றத்தின் ஒத்திகைக்கு வழிகாட்டுகிறது. அது மட்டுமல்ல, யாங்கோ நடன அரங்கேற்றம் சந்தைமயமாகுவதில் இவ்வழிக்காட்டும் குழு கவனம் செலுத்தி, யாங்கோ புதிதாக வளரும் பண்பாட்டுத் தொழிலாக அமையப் பாடுபடுகிறது. ஆண்டுதோறும் சீனச் சந்திர நாட்காட்டியின் படி ஜனவரி திங்கள் உள்ளூர் பிரதேசத்தில் யாங்கோ நடன அரங்கேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டு, சில தலைசிறந்த யாங்கோ நடனக் குழுக்களுக்கு அரங்கேற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஆண்டுதோறும் நடைபெறும் ஹெயாங் யாங்கோ விழாவில், யாங்கோ அரங்கேற்றுபவர் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதுவரை, ஹெயாங் நகரிலுள்ள 20க்கு அதிகமான யாங்கோ நடனக் குழுக்கள், வணிக நோக்கிற்கான கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றத்தில் கலந்துக் கொண்டுள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040