• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சியாங் இன மக்களின் பூத்தையல் கலை
  2013-10-15 09:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, ச்சியாங் இன பூத்தையல், ச்சியாங் இன மக்களின் ஆடைகளில் பின்னப்படும் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. ச்சியாங் இன ஆடவர் நீல அல்லது வெள்ளை வண்ணத்தில் தலைப்பட்டையை அணிய விரும்புகின்றனர். அவர்களே தயாரிக்கும் சணலால் பின்னப்பட்ட மேலாடையையும் ஆடையையும், ஆட்டுத் தோல் புறச் சட்டையையும் அணிகின்றனர். அவர்கள் அணியும் காலணியில், மேக உருவங்களின் பூத்தையல் காணப்படுகிறது. ச்சியாங் இன மகளிரும் நீல அல்லது வெள்ளை வண்ண தலைப் பட்டையை அணிய விரும்புகின்றனர். இளம் பெண்கள், பல்வேறு உருவங்களை பூவாக பின்னிய தலைப்பட்டையை அடிக்கடி அணிக்கின்றனர். மகளிரின் தலைப்பட்டையை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். அவ்வப்போது தலைப்பட்டை இடைக்கச்சையாக கட்டப்படுவதுமுண்டு. ச்சியாங் இன மக்களின் இடைக் கச்சை, ஆடைகள், குட்டைப் பாவாடை, காலணி, மகளிரின் தலைப் பட்டை, மணிக்கட்டுப்பட்டை, காலுறை, காலுறை செருப்பின் பட்டை ஆகியவற்றில் ச்சியாங் இன பூத்தையல் உருவங்களை காணலாம். ச்சியாங் பூத்தையல் பொருட்கள், வண்ணமயமாகவும், தலைசிறந்ததாகவும் இருக்கின்றன. அது மட்டுமல்ல, இப்பூத்தையல் பொருட்கள் ஆடைகளை அணிவதற்கு சிறந்த உணர்வை வழங்கி பங்காற்றுகிறது. அவை ஆடைகள் உடலில் உராய்வதை தடுக்கும் தன்மையை அதிகரிக்கின்றன.

ச்சியாங் இனத்தின் குறுக்கு பின்னல் கலை மற்றும் பூத்தையல் கலை முன்னதாக ஹான் இனம் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து பெற்றுக் கொண்டவை. ச்சியாங் இன மக்கள் நீண்டக்கால நடைமுறை போக்கில், ஹான் இனத்தின் குறுக்கு பின்னல் கலை மற்றும் பூத்தையல் கலையின் அடிப்படைத் தனிச்சிறப்பையும், பண்டைய ச்சியாங் இனப் பண்பாட்டின் பாரம்பரியத்தையும் ஒன்றிணைந்தனர். ச்சியாங் இன பூத்தையலின் உருவம், வடிவமைப்பு, வண்ணம், ச்சியாங் இனத்தின் தேசிய இனப் பாணியை உருவாக்கியுள்ளன. ச்சியாங் இன பூத்தையல் பொருட்கள் அவ்வினத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலைப் பொருட்களாக மாறியுள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040