• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ன் ச்சு இசை நாடகத்தின் உருவாக்கம்
  2013-10-29 08:53:52  cri எழுத்தின் அளவு:  A A A   

மிங் வம்சத்தின் துவக்கக்காலத்தில், ஒரு புறம், வட சீனாவின் இன்னிசை(tune)யால் பாடப்பட்ட Za Jv எனும் இசை நாடகத்தின் அரியக் கலை அம்சத்தை நன் ச்சி ஒன்றிணைத்தது. மறுபுறும், நன் ச்சி ஒரு பகுதி அறிஞர் பிரமுகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் நன் ச்சியின் புதிய தோற்றம் தோன்றியது. மின் வம்சத்தின் துவக்கக்காலத்தில், நன் ச்சி, மேலும் நவநாகரிகமான கலை வடிவமாக வளர்ந்து வந்தது. இது மேட்டுக்குடியினரின் பாராட்டைப் பெற்றது.

நன் ச்சி விரைவாக வளர்ந்து வந்தது. நன் ச்சி காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டிருந்ததுதான். இதற்குக் காரணமாகும். நன் ச்சியின் இன்னிசையின் மாற்றத்தில் இத்தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. தெற்கு சுங் வம்சம் முதல் மிங் வம்சம் வரை, நன் ச்சி பரவி வந்த போக்கில், இது பல பிரதேசங்களின் பேச்சு வழக்கு மற்றும் நாட்டுப்புற இசையுடன் ஒன்றிணைந்து, வெவ்வேறான பாணியுடைய உள்ளூர் இன்னிசைகளை உருவாக்கியது. இது, குன் ஷான் பிரதேசத்தின் இசை, வூ பேச்சு வழக்கு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்த பின், குன் ஷான் இசை பாணி உருவாகியது. ஆனால் அப்போதைய குன் ஷான் இசை பாணி, ஒரு வகை இசை வடிவமாக மட்டுமே இருந்தது. இது முழுமையான இசை நாடகமாக அரங்கேறவில்லை. மிங் வம்சத்தின் இடைக்காலம் வரை, குன் ஷான் இசை பாணி பெருமளவில் பரவலாகவில்லை. இது சூ சோ பிரதேசத்தில் மட்டுமே பரவி விட்டது. அக்காலத்தின் சூ சோ, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் முன்னணியில் இருந்தது. சீனாவின் தென் கிழக்குப் பிரதேசத்தில் இது முக்கிய நகரமாக இருந்தது. அங்குள்ள பொருளாதார வளர்ச்சி, பண்பாடு மற்றும் கலையின் வளர்ச்சியைத் தூண்டியது. இத்தகைய பின்னணியில், குன் ச்சு இசை நாடகம் சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறையில் மைய இடம் வகிக்கத் துவங்கியது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040