• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ன் ச்சு இசை நாடகத்தின் உருவாக்கம்
  2013-10-29 08:53:52  cri எழுத்தின் அளவு:  A A A   

இச்சீர்திருத்தம், பாடுவது, உடன்பாடுவது ஆகியவற்றில் நடைபெற்றது. வெய் லியாங் ஃபூ உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள், முந்தைய குன் ஷான் இசை பாணியின் அடிப்படையில், சீனாவின் தென் மற்றும் வடப் பகுதிகளின் பல்வகை இசைகளின் மேம்பாடுகளையும், தென் சீனாவின் நாட்டுப்புறப் பாடல் இசையின் தனிச்சிறப்பையும் இணைத்து, புதிய இன்னிசையை இயற்றினார். இவ்வின்னிசை, மெதுவான தாளத்தில், பாடுப்பட்டு கலையழகு உருவாகியது. இப்புதிய இன்னிசை வடிவம், குன் ச்சு தான். வெய் லியாங் ஃபூ இத்தகைய பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சிப் பெற்றார். ஆனால் அவர் இசைக் கருவிகளை இசைப்பதில் கை தேறவில்லை. குன் ஷான் இசை பாணியின் சீர்திருத்தத்தில், ஹெய்பெய் மாநிலத்தைச் சேர்ந்த ச்சாங் யெ டாங், வெய் லியாங் ஃபூக்கு அதிக ஆதரவு அளித்தார். ச்சாங் யெ டாங், திறமை மிக்க நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார். குன் ச்சு வட பகுதியின் இன்னிசைகளை சேர்ப்பதில் அவர் வெய் லியாங் ஃபூக்கு உதவி செய்தார். அதே வேளையில், வடப் பகுதி இன்னிசையில் சான் ச்சியன் என்ற மூன்று நரம்பிசைக் கருவியைச் சீராக்கினார். சியாங் என்ற செங்குத்து இசைக்குழல், புல்லாங்குழல் விரல்களுக்கிடை வைத்து இசைக்கும் இசைக்கருவி, பிபா எனும் நான்கு நரம்பிசை சீனயாழ், ஜால்ரா, முரசு முதலிய இசைக் கருவிகளுடன் இணைந்து, குன் ச்சுவின் உடன்பாடும் பகுதி அரங்கேற துவங்கியது. அதனால் குன் ச்சு இன்னிசை இனிமையாகவும் நயநுணுக்கமுடனும் மாறியுள்ளது.

குன் ச்சு சீர்திருத்தத்தின் வெற்றியினால், வெய் லியாங் ஃபூ புகழ் பெற்றவரானார். குன் ச்சு தோன்றியதும், அதிக கலை ஈர்ப்பு ஆற்றலைச் சார்ந்து, அக்காலத்தின் மிக பரந்துபட்ட மக்களின் கவனத்தை இது ஈர்த்தது. நாட்டுப்புற இசை கலைஞர்கள் பலர், வெய் லியாங் ஃபூவிடமிருந்து குன் ச்சு பாட்டுத் திறனைக் கற்றுக்கொண்டனர். அத்துடன், அந்த இனிமையான இன்னிசை பரந்துபட்ட அளவில் பரவி வந்தது. குன் ச்சு என்ற வடிவத்தில் முன்னதாக அரங்கேற்றிய இசை நாடகம், குன் ஷானைச் சேர்ந்த லியாங் செங் யூ எழுதிய "Huan Sha Ji" ஆகும் என்று பொதுவாக கருதப்படுகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040