• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ன் ச்சு இசை நாடகத்தின் உருவாக்கம்
  2013-10-29 08:53:52  cri எழுத்தின் அளவு:  A A A   

லியாங் செங் யூ, வெய் லாங் ஃபூவிடமிருந்து குன் ச்சு கற்றுக்கொண்டார் என்று தெரிய வருகிறது. குன் ச்சு பாடுவதில் அவர் அதிக திறமைகளைக் கொண்டவர் ஆவார். குன் ஷானில் அவருக்கு அதிக மதிப்பு அளிக்கப்பட்டது. குன் ஷான்னுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் வாழ்ந்த இளம் பாடகர்கள் அவரிடமிருந்து பாடும் திறமைகளைக் கற்றுக்கொண்டனர். ஏன் சிலர் தொலைத்தூரத்திலிருந்து குன் ஷான்னுக்கு வந்து அவரையே ஒரே ஒரு ஆசிரியமாக ஏற்றுக்கொண்டு அவர்களது ஆசிரியராக இருக்க வேண்டுமென அவரை கேட்டுக் கொண்டார். லியாங் செங் யூ, சில நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ஒத்துழைத்து, குன் ச்சுவை மேலும் சீர்ப்படுத்தி, Huan Sha Ji என்ற நாடக வடிவை இயற்றி, குன்ச்சு என்ற வடிவத்தில் அரங்கில் இதை அரங்கேற்றினார்.

வெய் லியங் ஃபூ, லியாங் செங் யூ ஆகியோரின் முயற்சிகளுடன், குன் ச்சுவின் செல்வாக்கு அதிகரித்து, ச்சியாங் சூ, செச்சியாங் ஆகிய மாநிலங்களில் பரந்துபட்டயளவில் விரைவாக பரவி, இப்பிரதேசங்களின் முக்கிய இசை நாடக வடிவமாக அது மாறியது.

நேயர்களே, "குன் ச்சு இசை நாடகத்தின் உருவாக்கம் பற்றி கேட்டீர்கள். இதனுடைய தொடர்ச்சி அடுத்தவாரம் இடம்பெறும். கேட்க தவறாதீர்கள். அடுத்த வாரம் சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து இடைபெறுகிறோம். நன்றி!வணக்கம்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040