• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:யூன்னான் மாநிலத்தின் வெய் ஷான் மாவட்டத்தின் குவெய் இனப் பூத்தையல் வேலைப்பாடு
  2013-11-19 09:41:26  cri எழுத்தின் அளவு:  A A A   
"2013ஆம் ஆண்டு தாலியின் முதலாவது தேசிய இனச் சுற்றுலா கைவினைப் பொருட்களின் வடிவமைப்புப் போட்டி" அண்மையில் சீனாவின் யூன்னான் மாநிலத்தின் தாலி சோவில் நடைபெற்றது. தாலி சோவின் வெய் ஷான் யீ இன மற்றும் குவெய் இனத் தன்னாட்சி மாவட்டத்தின் யுன் சியன் வட்டத்தின் Zhu Min Qian அம்மையாரின் "வசந்த கதவு திரை" என்னும் பூத்தையல் வேலைப்பாடு, சுமார் 1600 படைப்புகளிலிருந்து சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலாவது பரிசு வென்றது. அவரது "குழந்தையின் ஆடைகள்"இன்னொரு பூத்தையல் வேலைப்பாடு இப்போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது.

Zhu Min Qian அம்மையார் யுன் சியன் வட்டத்தின் பூத்தையல் சங்கத்தின் துணைத் தலைவராவார். இவ்வட்டத்தில் உள்ள Zhu Min Qian அம்மையாரின் வீட்டில், அவரது பூத்தையல் பணிமனையும், யுன் சியன் வட்டத்தின் பூத்தையல் சங்கமும் அமைந்துள்ளன. அவரது வீட்டில் 20 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய ஓர் அறையில் சில முகப்புகள் இருக்கின்றன. இம்முகப்புகளில் அவரது பூத்தையல் படைப்புகள் காணப்படுகின்றன. இப்படைப்புகளில், போர்வை உறைகள், தலையணையுறைகள், குழந்தைகளின் ஆடைகள் அடங்குகின்றன. Zhu Min Qian அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது:

"முன்பு ஓவியங்கள் வரைவதை குறிப்பாக கற்றுக்கொள்ளவில்லை. பள்ளியில் கல்வி பயின்றபோது பூத்தையல் உருவங்களை வரைய விரும்பினேன். இந்த பூத்தையல் பொருட்களின் உருவங்களை வடிவமைத்து, துணியில் இவற்றை வரைந்து, பூத்தையல் வேலை செய்தேன். இந்த பூத்தையல் பொருட்களின் விற்பனை நன்றாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் திருமணம் செய்யும்போது, இரண்டு போர்வைகளை பொதுவாக வாங்குவர். இந்த பூத்தையல் பொருட்களின் ஆண்டு விற்பனைத் தொகை, சுமார் 20 ஆயிரம் யுவானாகும்" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040