• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:யூன்னான் மாநிலத்தின் வெய் ஷான் மாவட்டத்தின் குவெய் இனப் பூத்தையல் வேலைப்பாடு
  2013-11-19 09:41:26  cri எழுத்தின் அளவு:  A A A   

வெய் ஷான் மாவட்டத்தில் யுன் ஷெங் கிராமத்தின் குவெய் இன பூத்தையல் மிகவும் புகழ் பெற்றது. யுன் ஷெங் கிராமத்தின் பூத்தையல் வேலைப்பாடு, நீண்டக்கால வரலாறுடையது. பூத்தையல் உருவங்கள் மிகவும் அழகானவை. கடந்த சில ஆண்டுகளில், யுன் ஷெங் கிராம அரசு அங்காங்கு சிதறி காணப்பட்ட குடும்ப பணிமனைகள் அனைத்தையும் ஊக்கமூட்டியது. இதன் மூலம் மிகையான உழைப்பாற்றலை முழுமையாக பயன்படுத்தி, பூத்தையல் தொழில்மயமாகும் நிலையை உயர்த்தி, சந்தையில் விற்பனைக்கு பெரும் முயற்சி எடுத்து பாடுபட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, யுன் ஷெங் கிராம அரசு பூத்தையல் சங்கம் நிறுவி, Hui Xiu எனும் தொழில் சின்னமாக அதைப் பதிவு செய்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யுன் ஷெங் கிராமக் குழுச் செயலாளர் Zhu Xian Li கூறியதாவது:

"வாழ்க்கையின் பழக்க வழக்கம், மத நம்பிக்கை ஆகிய காரணங்களால், குவெய் இன மகளிர் பொதுவாக வெளியூருக்குப் போவதில்லை. அவர்கள் குடும்பத்தின் முதியோரையும் குழந்தைகளையும் பராமரிக்கும் வேளையில், சுயமாக தங்களை பராமரித்துக் கொள்ளவும் வேண்டும். மகளிர் குடும்ப வருமானம் அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது இப்பூத்தையல் சங்கத்தில் சுமார் 250 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். அவர்கள் முக்கியமாக இயந்திரத்தை பயன்படுத்தி, பூத்தையல் செய்கின்றனர். ஆனால் கையால் பின்னப்படும் பூத்தையலின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறோம். கையால் பின்னப்படும் பூத்தையல் குவெய் இனத்தின் பண்பாட்டுச் சின்னமாகும்" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040