• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:யூன்னான் மாநிலத்தின் வெய் ஷான் மாவட்டத்தின் குவெய் இனப் பூத்தையல் வேலைப்பாடு
  2013-11-19 09:41:26  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது யுன் ஷெங் கிராமத்தில், "Hui Xiu" என்ற தொழில் சின்னத்தின் கீழ் சுமார் 50 வகை பூத்தையல் பொருட்கள் இருக்கின்றன. இப்பூத்தையல் பொருட்கள், யூன்னான் மாநிலம் முழுவதிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தவிர, கன் சு, நிங் சியா ஆகிய மாநிலங்களில் குவெய் இனம் மற்றும் யீ இனம் குழுமி வாழும் பிரதேசங்களில் இவை விற்கப்படுகின்றன. இப்பொருட்களின் ஆண்டு உற்பத்தி மதிப்பு, 25 லட்சம் யுவானை எட்டியுள்ளது. கிராமவாசிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

யுன் ஷெங் கிராமத்தின் மா சூ யுன் அம்மையார் பூத்தையல் மூலம் செல்வமடையும் பாதையில் காலடி எடுத்து வைக்கிறார். அவர் முதலில் கையால் பூத்தையலில் ஈடுபட்டார். பிறகு, அவர் வங்கிக் கடனைப் பயன்படுத்தி, 4 கணிணி பூத்தையல் இயந்திரங்களை வாங்கி, உற்பத்தி அளவை விரிவாக்கினார். அவர் கூறியதாவது:

"துவக்கத்தில் கையால் பூத்தையல் செய்தேன். மெதுவாக செய்ய முடிந்தது. இயந்திரத்தைப் பயன்படுத்தினால் பூத்தையல், உற்பத்தி அளவை அதிகரிக்க முடியும். ஆண்டுதோறும் பூத்தையல் மூலம் எனது நிகர வருமானம் 40 ஆயிரம் யுவானை எட்டும்" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040