இயந்திரத்தைப் பயன்படுத்தி, பூத்தையல் தொழிலை விரிவாக்கி, சந்தையின் தேவையை நிறைவு செய்து, வருமானத்தை அதிகரிக்கும் வேளையில், கையால் பூத்தையல் பின்னும் திறனை ஆக்கப்பூர்வமாக கையேற்றியுள்ளது என்று யுன் சியன் வட்டத்தின் பூத்தையல் சங்கத்தின் துணைத் தலைவர் Zhu Min Qian அம்மையார் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, கையால் பூத்தையல் பின்னும் திறனை உயர்த்தும் பொருட்டு, மகளிர் உருவ வடிவமைப்புகளை கற்றுக்கொள்வதற்கு பூத்தையல் சங்கம் ஏற்பாடு செய்கிறது. கையால் பின்னப்படும் பூத்தையல், வெய் ஷான் குவெய் இனப் பண்பாட்டின் அடையாளமாகவும், குவெய் இன மகளிரின் பெருமையை பறைசாற்றுவதாகவும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். பூத்தையல் சங்கத்தின் உதவியுடன், கையால் பின்னப்படும் பூத்தையல் தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட வேண்டும் என்றும், இப்போக்கில் பூத்தையலின் தேசிய இன மற்றும் பிரதேச தனிச்சிறப்புகள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
நேயர்களே, "யூன்னான் மாநிலத்தின் வெய் ஷான் மாவட்டத்தின் குவெய் இனப் பூத்தையல் வேலைப்பாடு" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.