• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:எலுன்ச்சுன் இனத்தின் கைவினைக் கலைப் பண்பாடு
  2013-11-26 10:12:18  cri எழுத்தின் அளவு:  A A A   
எலுன்ச்சுன் இனம், வட கிழக்கு சீனாவில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினமும், சீனாவில் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்டுள்ள தேசிய இனங்களில் ஒன்றாகும். முந்தைய காலத்தில் இவ்வினத்தவர்கள், வேட்டையாடுவதில் ஈடுபட்டனர். 1953ஆம் ஆண்டு, சீன அரசின் கொள்கையின் ஆதரவுடன், எலுன்ச்சுன் இனத்தவர், ஆதிகாலக் காட்டிலிருந்து வெளியேறி, குடியிருப்புகளில் வாழ்க்கை நடத்தத் துவங்கினர். சமூக வளர்ச்சிபபோக்கில், எலுன்ச்சுன் இனம், முந்தைய பண்பாட்டுப் பாரம்பரியத்தை இழக்கவில்லை. இவ்வினம், வளர்ச்சிப் போக்கில் தன் இனத்தின் பண்பாட்டைக் கையேற்றப் பாடுபட்டு வருகிறது.

எலுன்ச்சுன் இனம் வாழும் பிரதேசத்தில் அடர்ந்த தாவரங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில், வெள்ளை பிர்ச் மரங்கள் அதிகமாக இருக்கின்றன. தவிர, இங்குள்ள விலங்குகள் வாழும் காடு செழிப்பாக இருக்கிறது. எலுன்ச்சுன் இனத்தின் பாரம்பரிய கைவினைக் கலைப் பொருட்களில், கவரிமான் தோல் பொருட்களும், பிர்ச் மரப் பட்டை பொருட்களும் முக்கியமாக இருக்கின்றன. 84 வயதான Erten அம்மையார் எலுன்ச்சுன் இனப் பண்பாட்டு வாரிசு ஆவார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:

"முற்காலத்தில் எலுன்ச்சுன் இன ஆண்களும், பெண்களும் வேறுபட்டப் பணிகளில் ஈடுபட்டனர். பெண்கள் வேட்டையாடுவதில் ஈடுபடவில்லை. அவர்கள் வீட்டு கடமைகளுக்குப் பொறுப்பேற்றனர். மங்கையருக்கு 8 வயதாகும் போது, பூத்தையல் வேலையில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் திருமணம் செய்வதற்கு முன், பூத்தையல், பின்னல் ஆகிய கைவினை திறன்களில் தேர்ச்சி பெற்றிருப்பர். சிறு வயதிலேயே இக்கைவினை திறன்களைக் கற்றுக் கொள்ளத் துவங்கினேன்" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040