• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:எலுன்ச்சுன் இனத்தின் கைவினைக் கலைப் பண்பாடு
  2013-11-26 10:12:18  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, Man Gu Meiவின் மகன் He Guo Zhi இக்கைவினை திறனைக் கையேற்றியுள்ளார். He Guo Zhi நாட்டுப்புற கைவினைக் கலைப் பொருட்களை தாமாக வடிவமைத்து, தயாரித்து, கைவினைக் கலைப் பொருள் விற்பனை கடையைத் திறந்து வைத்தார். அது மட்டுமல்ல, அவர் இணைய வலைப்பூ, QQ என்னும் சமூக தொடர்பு இணையம், தனிநபர் இணையத் தளம் உள்ளிட்ட வழிமுறைகளில் எலுன்ச்சுன் இனத்தின் கைவினைக் கலைப் பொருட்களை பரவல் செய்து வருகிறார். 2010ஆம் ஆண்டு அவர் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில் சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எலுன்ச்சுன் இனத்தின் பிர்ச் மரப் பட்டை கைவினைக் கலைப் பண்பாட்டை பன்முகங்களிலும் விவரித்தார்.

இருந்த போதிலும், எலுன்ச்சுன் இனத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பாதுகாப்பில் இடர்பாடுகள் நிலவுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், வேட்டையாட தடைக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது கவரிமான் தோல் கிடைப்பது கடினம். பிர்ச் மரப் பட்டை, கவரிமான் தோல் ஆகியவற்றின் பதனீட்டுத் திறனில் தேர்ச்சிப்பெற்றோரில் முதியோர் அதிகம். அந்த முதியோரில் பலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனுடன் எலுன்ச்சுன் இனத்தின் குறிப்பிட்ட வரலாறு இழந்து வருவதாக மக்கள் கவலையடைந்துள்ளனர். இக்குறிப்பிட்ட வரலாறு, எலுன்ச்சுன் இனத்தின் செல்வமாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040