• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:எலுன்ச்சுன் இனத்தின் கைவினைக் கலைப் பண்பாடு
  2013-11-26 10:12:18  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது Man Gu Mei தயாரிக்கும் பெரும்பாலான பிர்ச் மரப் பட்டை கைவினைக் கலைப் பொருட்கள், மாவட்ட நகரில் வாழும் He Lei எனும் இளைஞர் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. He Lei மற்றும் அவரது மனைவி Wu Nan, மாவட்ட நகரில் சிறுபான்மை தேசிய இனக் கைவினை கலைப் பொருள் பணிமனையையும், அதற்கான கடையையும் நடத்துகின்றனர். இக்கடையின் வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது என்றும், எலுன்ச்சுன் இனத்தின் பாரம்பரிய கைவினைக் கலைப் பொருட்கள் மக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்றன என்றும் Wu Nan செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது:

"இக்கடையில் விற்கப்படும் கைவினைப் பொருட்கள் எலுன்ச்சுன் மாவட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கைவினைக் கலைப்பொருட்களுக்கு தேவையான மூலப் பொருட்கள் அதிகம். அது மட்டுமல்ல, இக்கைவினை கலைப் பொருட்களைத் தயாரிக்கும் திறனாளிகளும் மிக அதிகமாக இருக்கின்றனர். இம்மாவட்டத்தில் கைவினைக் கலை பண்பாட்டின் பாரம்பரியம் கையேற்றப்பட்டுள்ளது. தற்போது இம்மாவட்டத்தின் இளைஞர்கள் பாரம்பரிய கைவினைத் திறனில் தேர்ச்சி பெற்ற அடிப்படையில், புதிய கைவினைக் கலை பொருள் வகைகளை வடிவமைத்து தயாரித்துள்ளனர்" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040