• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்கள்
  2013-12-19 15:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் குய் சோ மாநிலத்தின் மியெள இன மற்றும் துங் இனத் தன்னாட்சி சோவின் வட மேற்குப் பகுதியில், ஷி பிங் மாவட்டம் அமைந்துள்ளது. தொடர் வண்டி மூலம், குய் சோ மாநிலத்தின் தலைநகர் குய் யாங்கிலிருந்து ஷி பிங் மாவட்ட நகருக்குச் செல்ல, மூன்றரை மணி நேரம் தேவைப்படுகின்றது. ஷி பிங் மாவட்டத்தில், நான்கு வட்டங்களும் மூன்று கிராமங்களும் இடம்பெறுகின்றன. தற்போது இம்மாவட்டத்தில் அதிகமான மியெள இன மக்கள் பாரம்பரிய வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வினத்தின் ஆடவர் லூ ஷெங் என்னும் நாணல் புல்லாங்குழல் இசைக் கருவியை இசைத்து, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளி அலங்காரப் பொருட்களை தயாரிக்கின்றனர். இவ்வினத்தின் மகளிர் நடனம் ஆடி, ஓட்டும் தன்மையுள்ள ரப்பர் அரிசி மதுக் கொண்டு விருந்தினரை வரவேற்கின்றனர். ஆழகான உருவங்களை ஆடைகளில் பின்னியும் பூத்தையல் அலங்காரப் பொருட்களையும் பூத்தையல் செய்கின்றனர்.

லுங் சே ஃபெங் ஒரு பாரம்பரிய மியெள இனக் குடும்பத்தில் பிறந்தார். அவர் இக்குடும்பத்தின் மிக இளைய மகள் ஆவார். அவரது கருப்பு வண்ண வட்ட தலைமுடியிலுள்ள மூன்று வெள்ளிப்பட்டை ஒப்பனை இடுக்கி மக்களின் கவனத்தை ஈர்கின்றன. அவை தலைசிறந்த வடிவங்களைக் கொண்டு, கைவினைஞர்களின் தலைசிறந்த கைவினை திறனை வெளிப்படுத்துகின்றன. மியெள இன வெள்ளி அலங்காரப் பொருட்களின் தயாரிப்பு திறன், தலைமுறை தலைமுறையாக பரவி வருகின்றது. பின்தங்கிய உற்பத்தி நிலைமையால், மியெள இனக் கைவினை கலைஞர்கள் கைகளால் வெள்ளி அலங்காரப் பொருட்களை தயாரிக்கின்றனர். அதனால் அவர்கள் சிறந்த கைவினைத் திறனில் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்கின்றனர். மியெள இனத்தின் ஒவ்வொரு வெள்ளி அலங்காரப் பொருளும், தனிச்சிறப்பு வாய்ந்த படைப்பாகும். இப் பொருட்கள், கலை அழகும், சேகரிப்பு மதிப்பும் வாய்ந்தவை. மியெள இனத்தின் ஒவ்வொரு குடும்பமும், ஆடவரிடையே பரவி வரும் தனிச்சிறப்பு வாய்ந்த கைவினைத் திறனை கொண்டுள்ளது. லுங் சே ஃபெங் கூறியதாவது:

"வெள்ளி அலங்கார பொருட்கள் தயாரிப்பு கைவினைத் திறன், எனது கொள்ளு தாத்தா முதல், எனது குடும்பத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கையேற்று வந்துள்ளது. என் அண்ணன் வெள்ளி அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறார். இக்கைவினை திறன், ஆடவரிடையே பரவியுள்ளது. மகளிர் இக்கைவினை திறனைக் கற்றுக்கொள்ள அனுமதி கிடையாது. என் அண்ணனுக்கு பத்துக்கு மேலான வயதாக இருந்தபோது, அவர் இத்திறனைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். இத்திறனின் கையேற்றல் வடிவம், பாரம்பரியமுடையதாக இருக்கிறது. இக்கைவினை தொழில் நுட்பம், ஒரு குடும்ப உறுப்பினர்களிடத்தில் மட்டுமே பரவி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை தொழில் நுட்பம் உண்டு" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040