• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்கள்
  2013-12-19 15:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   

மியெள இனத்தவர், தங்கள் குடும்பத்தின் செல்வங்களை, வெள்ளியாக பரிமாறிக் கொண்டனர். அவர்கள் உருகும் பானையில் வெள்ளியை வைத்து, வெள்ளித்துண்டை உருக்கி வடிவங்களுக்கு ஏற்றால் போல் அடித்து பண்படுத்தி தயாரிக்கின்றனர். அவர்கள் வெள்ளியை ஆடையை போலும் உருவாக்குகின்றனர். மியெள இன மங்கையர் இந்த வகை ஆடையை அணிகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் வெள்ளி அலங்காரப் பொருட்களின் எண்ணிக்கை, ஒரு குடும்பத்தின் செல்வம் மற்றும் தகுநிலையை வெளிப்படுத்துகின்றது. இப்பண்பாடு, மியெள இனத்தின் வளர்ச்சியுடன் நெருக்கமாக தொடர்புடையதாகும். வெள்ளி அலங்காரப் பொருட்களின் பாரம்பரிய உருவங்கள், பெரும்பாலும் மியெள இன பழைய பாடல்கள் உள்ளிட்ட புராணக் கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும். எடுத்துக்காட்டாக, வெள்ளிக் கிரீடம், வெள்ளி கொம்பு, வண்ணத்துப்பூச்சி, பறவை, வெள்ளிப் பதக்கம் இவற்றில் இடம்பெறுகின்றன. மியெள இனத்தின் பாரம்பரிய வெள்ளி அலங்காரப் பொருட்கள், அவ்வினத்தின் முக்கிய பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது. இது பற்றி லுன் சே ஃபெங் கூறியதாவது:

"மஞ்சள் ஆற்றின் நடுப்பகுதியும் கீழ்ப் பகுதியும் தான், மியெள இனம் தோன்றிய இடமாகும். ச்சி யூ (Chi You)மியெள இனத்தின் மூதாதையர் ஆவார். போர் காரணமாக, மியெள இன மக்கள் யாங் சி ஆற்றுப்பள்ளத்தாக்கு பிரதேசத்துக்கு குடிபெயர்ந்தனர். தற்போது மியெள இனத்தவர், சீனாவின் தென் மேற்கு பகுதியில் முக்கியமாக வாழ்கின்றனர். மியெள இனத்தவரில் ஒரு பகுதியினர், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் குடிபெயர்ந்துள்ளனர். குடிபெயர்வுப் போக்கில், அவர்கள் குடும்பச் சொத்துகளை வெள்ளியாகப் பரிமாறிக்கொண்டனர். இவ்வெள்ளியை அலங்காரப்பொருட்களாக தயாரித்து, அவர்களது உடம்பில் அணிவது மிகவும் வசதியாக இருந்தது. தவிர, வெள்ளிப் பொருட்கள் கெட்ட ஆவியை விரட்ட முடியும் என்று மியெள இனத்தவர் கருதுகின்றனர். படிப்படியாக, மியெள இனக் குடும்பங்கள், வெள்ளிப் பொருட்களைக் கொண்டிருப்பது, அவர்களது தனிச்சிறப்பு வாய்நத் பண்பாடாக மாறியுள்ளது" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040