• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்கள்
  2013-12-19 15:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த வெள்ளி அலங்காரப் பொருட்கள், மியெள இன மங்கையரின் திருமணத்துக்காக ஆயத்தம் செய்யப்படுகின்றன. முக்கிய விழாக்களிலும், முக்கிய வேளையிலும், எடுத்துக்காட்டாக திருமணத்தின் போது, மியெள இன மங்கையர் தத்தமது அனைத்து வெள்ளி அலங்காரப் பொருட்களையும் அணிந்து, வெளியே செல்கின்றனர். அவர்களது தலையில் வெள்ளி தொப்பி, கழுத்தில் வெள்ளி வளையம், கைகளில் குறைந்தது 5 வெள்ளி கை வளையங்களை அணிகின்றனர். அவர்களது ஆடைகள், வெள்ளியால் அலங்கரிக்கப்படுகின்றன. அவர்கள் அணியும் வெள்ளி ஆடையும் வெள்ளி அளங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் மொத்த எடை, குறைந்தது சுமார் ஐந்து கிலோகிராமாக இருக்கும். அவற்றை அணியும் போது, அவர்கள் மிகவும் அழகாக ஜொலிக்கின்றனர். லுன் சே ஃபெங் கூறியதாவது:

"மியெள இனத்தவர் இயற்கையை மதித்து வழிபடுகின்றனர். மியெள இனப் பண்பாட்டில் பல மரபுச் சின்னங்கள் உள்ளன. நெடுவால் பகட்டு வண்ணக் கோழி, வெள்ளி அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களின் உருவங்களில் பொதுவாக காணப்படும் மரபுச் சின்னங்களில் ஒன்றாகும். ஒரு செவிவழி கதையின்படி, பண்டைக்காலத்தில் ஒரு நெடுவால் பகட்டு வண்ணக் கோழி, குடிபெயர்ந்து சென்ற மியெள இனத்தவரை, எழில் மிக்க இயற்கைக் காட்சிகளுடைய இடங்களுக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. மியெள இனத்தவர் அவ்விடங்களில் அமைதியான வாழ்க்கை நடத்த துவங்கினர். மியெள இன மங்கையரின் ஆடைகள் மிகவும் அழகாக உள்ளன. அவை வெள்ளித் தொப்பி உள்ளிட்ட அலங்காரப் பொருட்களுடன், அலங்கரிக்கப்பட்ட நெடுவால் பகட்டு வண்ணக் கோழியின் வடிவம் போல் இருக்கின்றன" என்றார் அவர்,

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040