• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்கள்
  2013-12-19 15:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   

வெள்ளி அலங்காரப் பொருட்கள் மற்றும் பூத்தையல் வேலைகளின் அலங்காரத்துடன், குய்சோ மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் மியெள இன மகளிர் அணியும் ஆடைகள், மிகவும் அழகாக உள்ளன. ஓரிணை வெள்ளி அலங்காரப் பொருட்களின் மொத்த எடை, நான்கு கிலோகிராமை எட்டக்கூடியது. ஆடைகளின் உருவங்கள், மூதாதையர் வாழ்ந்த காலத்திலிருந்து பரவி வரும் புராணக் கதைகளிலிருந்து பெறப்பட்டவை. இந்த ஆடைகள் மூலம் மியெள இனப் பண்பாடு கையேற்றப்பட்டு வருகிறது. மியெள இன வெள்ளி அலங்காரப் பொருட்கள், "உடம்பில் அணியும் பழமை வாய்ந்த காவியம்" என அழைக்கப்படுகிறது.

மியெள இனக் குடும்பத்தில், ஒரு வெள்ளிப் பொருளை தயாரிக்க குறைந்தது 20க்கு அதிகமான செய்முறைகள் தேவைப்படுகின்றன. இந்த சிக்கலான செய்முறைகள் ஒருவரால்தான் நிறைவேற்றப்படுகிறது. சாதாரண வெள்ளிப்பாளங்கள், கைவினைஞரின் கை வண்ணத்தல், உள்ளுரம் வாய்ந்த டிராகன், ஃபோனிக்ஸ் உருவங்களாக மாறியுள்ளன. ஒரு வெள்ளித் தொப்பியில், அதிகமான வெள்ளி பூக்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், வெள்ளி மணிகள் ஆகியவை காணப்படுகின்றன. மியெள இனத்தவரின் கைகளில், இத்தொப்பியைத் தயாரிக்க, சில மாதம் நேரம் மட்டுமே ஆகின்றது. இதன் வடிவம் சிக்கலாக இருப்பதோடு, அதன் எடையும் மிகவும் குறைவே.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040