• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்கள்
  2013-12-19 15:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   

நெடுவால் பகட்டு வண்ணக் கோழியைத் தவிர, வண்ணத்துப்பூச்சி மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்களின் உருவங்களில் பொதுவாக காணப்படுகிறது. வண்ணத்துப்பூச்சி, மியெள இனத்தின் தோற்றம் பற்றிய செவிவழிக் கதையிலுள்ள முக்கிய கதா பாத்திரங்களில் ஒன்றாகும். மியெள இன மக்கள் வண்ணத்துப்பூச்சியை, "வண்ணத்துப்பூச்சி அம்மா" அன்புடன் அழைக்கின்றனர். அதனால், ஒவ்வோர் அலங்காரப் பொருளும், எளிய கைவினைப் பொருட்கள் மட்டுமல்ல. அவை, மியெள இனத்தின் செழிப்பான பண்பாடுகளின் வெளிப்பாடாக இருக்கின்றன. 2006ஆம் ஆண்டு மே திங்களில், மியெள இன வெள்ளி அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு தொழில் திறன், சீன அரசவையின் அனுமதியுடன், சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்கக்ப்பட்டது.

நேயர்களே, மியெள இனத்தின் வெள்ளி அலங்காரப் பொருட்கள் பற்றிக் கேட்டீர்கள். இந்நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களை மொழிப்பெயர்ப்பாளர் மீனாவுக்கு கடிதங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ தெரிவியுங்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040