• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன பண்பாடு:ஃபூ சியன் மாநிலத்தின் லுங் யன் தேயிலை தொழிலின் வளர்ச்சி
  2014-01-14 15:43:12  cri எழுத்தின் அளவு:  A A A   

லுங் யன் பிரதேசத்தின் தொடர் வரலாறு பற்றிய ஆவணத்தின்படி, மிங் மற்றும் சிங் வம்சக்காலம் தொட்டு, லுங் யன் மக்கள் தேயிலை பயிரிடத் துவங்கினர். கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில், லுங் யன் Xie Bei தேயிலை, ஃபூ சியன் மாநிலத்தின் பத்து புகழ்பெற்ற தேயிலை வகைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. லுங் யன் நகரின் சின் லோ மாவட்டத்தில் விளையும் இந்த வகை தேயிலை, சீனாவின் தேயிலை பற்றிய சிறப்பு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள தரமிக்க தேயிலையாகும்.

லுங் யன் மக்கள் தேயிலை பயிரிடத் துவங்கிய காலம் தொடர்பாக, இந்நகரின் தைவான் நீரிணை இரு கரை தேயிலை பரிமாற்ற சங்கத்தின் தலைவர் லீ ச்சி யுன் வேறுபட்ட புரிந்துணர்வு கருத்துக்களை அறிந்து வைத்துள்ளார். லுங் யன் மக்கள் தேயிலை பயிரிடும் வரலாறு, சுங் வம்சக்காலத்தில் துவங்கியது என்று அவர் கருத்துத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"வரலாற்றுப் பதிவின் படி, சுங் வம்சத்தில் லுன் யன் பிரதேசத்தில் தேயிலை பயிரிடப்பட்டது. இரண்டாவதாக, மாவட்ட வரலாறு பற்றிய ஆவணத்தின்படி, சுங் வம்சத்தில், தேயிலை பயிரிடுதல் யாஞ்சி ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து கீழ் பகுதிக்கு பரவலாகியது. அதற்கு பின், இது யாஞ்சி ஆற்றின் கீழ்ப் பகுதியிலிருந்து சீனாவின் தென் பகுதிக்கு பரவி விட்டது. மூன்றாவதாக, சுங் வம்ச அரசு, தேயிலை பயிரிடுதலை வரி வசூலிப்பு முறையில் ஒன்றாக கொண்டிருந்தது. உள்ளூர் பிரதேசத்தின் அலுவலர்கள் சுங் வம்ச அரசின் கட்டளையைச் செயல்படுத்தி வந்தனர். தவிர, பழக்க வழக்கப்படி, கோயில் அமைந்துள்ள இடத்தில், தேயிலை பயிரிடப்பட்டது. இப்பிரதேசத்தின் தியன் குங் மலை கோயில் சுங் வம்சத்தில் கட்டியமைக்கப்பட்டது. அதனால், லு யன் மக்கள் தேயிலை பயிரிடுவது, சுன் வம்சக்காலத்தில் துவங்கியது" என்றார் அவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040