• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன பண்பாடு:ஃபூ சியன் மாநிலத்தின் லுங் யன் தேயிலை தொழிலின் வளர்ச்சி
  2014-01-14 15:43:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தின்படி, உடலின் மேற்புற வெப்பத்தை தணிவுப்படுத்தல் உள்பட பல செயல்திறன்கள் தேயிலைக்கு உண்டு. தேயிலையில் இடம்பெறும் தேயிலை பாலிபினால்கள், லைபோபாலிசாகரைட், வெண்புரதம் உள்ளிட்டவை மக்களின் உடல் நலத்துக்கு சாதகமானவை. சீனாவில் உடல் நலப் பாதுகாப்புச் செயல்திறனைத் தவிர, தனிச்சிறப்பு மிக்க பண்பாட்டு அம்சம் தேயிலைக்கு உண்டு. சீன மக்களைப் பொறுத்த வரை, தேநீர் குடிப்பதற்கு கொடுக்கும் பானம் மட்டுமல்ல. பெரும்பாலான வேளையில் இது மரியாதை அளிக்கும் வழிமுறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று லீன் ஜின் போ தெரிவித்தார்.

லுங் யன் மக்களைப் பொறுத்தவரை, தேயிலை, அவர்களது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. தற்போது லுங் யன் தேயிலை பயிரிடுதல் நிலப்பரப்பு, 15 ஆயிரத்து 300 ஹெக்டரை எட்டியுள்ளது. தேயிலை உள்ளூர் மக்களின் வருமானத்தை உயர்த்தும் அதேவேளையில், உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உயிராற்றலை வழங்கியுள்ளது. லுங் யன்னில் பயிரிடும் வூ பின் பசம் தேயிலை மக்களால் நேசிக்கப்பட்டு, லுங் யன்னின் பண்பாட்டு அடையாளமாக மாறியுள்ளது. வூ பிங் பசும் தேயிலையின் தரம், தேயிலை துறையில் சி ஹு லுங் சிங் தேயிலையின் தரத்துக்கு ஒத்தது. இத்தேயிலை வகை, பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சில சமயங்களில் அதிக அனுபவம் பெற்ற தேயிலை வணிகர்கள் கூட இவ்விரு தேயிலைகளுக்கிடை வேறுபாடுகளை தெளிவாக கூற விட முடியாது. இருந்தபோதிலும், இவ்விரு தேயிலை வகைகள் விலையில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. வூ பிங் பசும் தேயிலையின் விலையை விட சி ஹு லுங் சிங் தேயிலையின் விலை சில நூறு மடங்கு அதிகமாகும். தேயிலை பயிரிடுதலில் கவனம் செலுத்துவது மட்டுமே போதுமானதாக இல்லை என்றும், தேயிலை தொழில் சின்னத்தை உருவாக்கினால் தான், லுங் யன்னின் தேயிலை சீனா முழுவதிலும் வரவேற்பையும் புகழையும் பெற முடியும் என்று லுங் யனிலுள்ள தேயிலை தொழில் நிறுவனங்கள் ஆழமாக புரிந்து கொண்டுள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040