• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 2
  2014-03-04 10:05:04  cri எழுத்தின் அளவு:  A A A   

அன்ஜியாங்பெர்னா, யு கு மற்றும் மான்டரீன் சீன மொழிகளை சரளமாக பேச முடியும் என்ற போதிலும், யு கு இன மொழியைப் பரவல் செய்வதில் இன்னல்கள் அதிகம் என்பதை உணர்ந்துள்ளார். அதனால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நேரத்தில் அவர் யு கு இன நண்பர்களுடன் ஒன்று கூடுகின்றார். நண்பர்களுடன் யு கு இன மொழிப் பேசி அளவளாவுவது, இந்நடவடிக்கையில் அவர் பங்கெடுப்பதன் முக்கிய நோக்கமாகும். அன்ஜியாங்பெர்னா கூறியதாவது:

"நாங்கள் ஒன்று கூடுவது, யு கு மொழி மூலம் உரையாடுவதற்காகும். முன்பு என்னால் யு கு மொழியை நன்றாக பேச முடியும். திபெத் இனத்தவர்கள் வாழும் பிரதேசத்தில் குடிபெயர்ந்த பின், யு கு மொழியைப் பயன்படுத்தும் வாய்ப்பு மென்மேலும் குறைந்துள்ளதால், இம்மொழி பேசுவதில் இன்னல் அதிகரித்துள்ளது" என்றார் அவர்.

யு கு மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. யு கு இன முதியோர் இம்மொழியை வாய்வழியாகவே அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால் இம்முதியோரில் பலர் மரணமடைந்த பின், யு கு மொழியிலுள்ள அதிக சொற்கள் அழிந்து விட்டன என்று சு நன் மாவட்ட யு கு இனப் பண்பாட்டு ஆய்வுப் பணியகத்தின் தலைவர் அன் யு பிங் தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040