• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 2
  2014-03-04 10:05:04  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, சீனத் தேசிய இன விவகார ஆணையமும், சிறுபான்மை தேசிய இன மொழிப் பணியகமும் 2003ஆம் ஆண்டு சு நன் மாவட்ட யு கு இனப் பண்பாட்டு ஆய்வுப் பணியகத்தை நிறுவின. இப்பணியகத்தின் பணியாளர்கள், சு நன் மாவட்டத்தின் பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த யு கு இனத்தவர்களாவர். யு கு மொழி தொடர்பான பல்வகை தரவுகளைச் சேகரிப்பது அவர்களின் முக்கிய பணியாகும். உற்சாகமில்லாத பணியின் காரணமாக, பலர் இந்த ஆய்வுப் பணியகத்திலிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் அன் யூ பிங் இப்பணியில் உறுதியாக நிற்கிறார். அவர் கூறியதாவது:

"இந்த ஆய்வுப் பணியகத்தின் பணியாளர்கள் யு கு இனப் பண்பாட்டை நேசிக்கின்றனர். யு கு மொழி தொடர்பான தரவுகளை சேகரித்து, தொகுத்து, சேமிப்பது எங்கள் முக்கிய பணிகளாகும். எதிர்காலத்தில், இந்த பணியகத்தில் ஆய்வாளர்களும், திறமைசாலிகளும் முழுமையாக இருக்கும்போது, இத்தரவுகளை ஆய்வுச் செய்வோம்" என்றார் அவர்.

நேயர்களே, "சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் "பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இதே நிகழ்ச்சியில் சந்திப்போம். வணக்கம். நேயர்களே!


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040