• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பெய் கு யாவ் இன இளைஞர் ஒருவரின் கனவு
  2014-03-17 10:05:52  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் குவாங் சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் நான் டான் மாவட்டம், யூன் குவெய் (யுன்னான்-குவெய் சோ)பீடபூமியின் தெற்கு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. பெய் கு யாவ் என்ற தனிச்சிறப்பு வாய்ந்த குழுவினர் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர்.

"பெய் கு யாவ்" என்பது, சீன மொழியில் "வெள்ளை காற்சட்டையை அணிந்த யாவ் இனம்" என்று பொருட்படும். பெய் கு யாவ் குழுவினர், சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான யாவ் இனத்தின் ஒரு கிளை இனமாகும். பாய் கு யாவ் இன ஆடவர், வெள்ளை வண்ணக் காற்சட்டையை அணிந்திருப்பதால், இவ்வினக் கிளை பாய் கு யாவ் என அழைக்கப்படுகிறது. தற்போது பெய் கு யாய் இனத்தின் மக்கள் தொகை சுமார் 30 ஆயிரமாகும். பெய் கு யாவ் இனம், முழுமையான பாரம்பரிய பழக்க வழக்கங்களை இன்னமும் கொண்டுள்ளதால், இது யுனேஸ்கோ அமைப்பால், "மனித குல நாகரீகத் தொல்லுயிர் எச்சம்" என அழைக்கப்படுகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040