• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
து லோவ் ஓவியர் லியாங் மிங்
  2014-04-11 09:42:06  cri எழுத்தின் அளவு:  A A A   

லியாங் மிங் என்பவர், சீன நுண்கலைஞர் சங்கத்தின் உறுப்பினரும், ஃப்சியான் மாநிலத்தின் நுண்கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் ஆவார். ஓவியரான அவர், து லோவ் என்னும் சீனாவின் புகழ்பெற்ற பாரம்பரியக் குடியிருப்பை கருப்பொருளாக வரைகின்றார்.

து லோவ் என்னும் குடியிருப்பு, ஹாக்கா என்னும் சீனாவின் ஹான் இனத்தின் கிளை இன மக்களின் பாரம்பரியக் குடியிருப்பாகும். குடும்பத்தினர் அனைவரும் குழுமி வாழ்வதையும், எதிரிகளை நுழையவிடாமல் தடுப்பதையும் நோக்கங்களாக கொண்டு ஹாக்கா மக்கள் து லோவ் குடியிருப்புகளைக் கட்டியமைத்தனர். இக்குடியிருப்புக்கள், வட்ட வடிவத்திலோ அல்லது செவ்வக வடிவத்திலோ காணப்படுகின்றன. அவை, பெரிய அல்லது சிறிய முத்துகள் போல், ஃப்சியான் மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியிலுள்ள எழில்மிக்க இடங்களில் ஆங்காங்கு காணப்படுகின்றன. து லோவ் குடியிருப்புக்கள், பொதுவாக மலையடிவாரத்தில் அல்லது ஆற்றுக்கரையில் கட்டியமைக்கப்பட்டுள்ளன. து லோவ் குடியிருப்புக்கள், ஹாக்கா மக்களின் தனித்தன்மையான பண்பாட்டைக் கையேற்றி வருகின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040