• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
து லோவ் ஓவியர் லியாங் மிங்
  2014-04-11 09:42:06  cri எழுத்தின் அளவு:  A A A   

"சீனச் சந்திர நாட்காட்டியின்படி முதலாவது திங்கள்" என்ற ஓவியப் படைப்பால், லியாங் மிங் சீனாவின் ஓவியத் துறையில் புகழ்பெற்றார். 1993ஆம் ஆண்டு, இந்த ஓவியம், சீன நுண்கலை அரங்கால் சேமிக்கப்பட்டது. சிவப்பு சுவர்களையும், கறுப்பு ஓடுகளையும் கொண்டுள்ள து லோவ் குடியிருப்பு, இந்த ஓவியத்தின் பின்னணியில் வரையப்பட்டது. சீனாவின் பாரம்பரிய விளக்கு விழாவை ஹாக்கா மக்கள் கொண்டாடுவது உள்ளிட்ட ஹாக்கா மக்களின் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்கள், இந்த ஓவியத்தில் அப்படியே வெளிப்படுத்தப்படுகின்றன. ஓவியத்திலுள்ள சிவப்பு வண்ணம், அந்த ஓவியத்துக்கு மகிழ்ச்சியான விழா சூழ்நிலையை அதிகரிக்கின்றது.

இந்த ஓவியம் வரையப்பட்ட சற்று பின்னர்தான், லியாங் மிங்கின் கலை இலட்சியத்தில் தடைகள் ஏற்பட்டன. ஆனால் அவர் து லோவ் ஓவியத்தை வரைவதைக் கைவிடவில்லை. அவர் இன்னமும் து லோ குடியிருப்புக்களுக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டு வருகிறார். து லோவ் குடியிருப்புடன் மேலதிகமாக தொடர்பு வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பின், இத்தடைகள் முற்றிலும் நீங்கி விட்டன. "தற்போது எந்தவித து லோவ் குடியிருப்பையும், எந்த கோணத்திலிருந்தும் வரைய முடியும்" என்று லியாங் மிங் செய்தியாளரிடம் தெரிவித்தார். து லோவ் குடியிருப்பு, அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040