கி.மு. 5வது நூற்றாண்டு முதல் கி.பி.முதலாவது நூற்றாண்டு வரை, சீனாவின் யூன்னான் மற்றும் குவாங்சி பிரதேசங்களிலும், வியட்நாமின் வடப்பகுதியிலும், வெண்கல முரசுகள் முக்கியமாக பரவி வந்தன.
வெண்கல முரசு, பண்டைக்காலத்தில் சீனாவுக்கும் தென் கிழக்காசியாவுக்குமிடை பண்பாட்டுப் பரிமாற்றத்தின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று சீனப் பண்டைக்கால வெண்கல முரசு ஆய்வகத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் Jiang Ting Yu தெரிவித்தார். வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், மியன்மார், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட எட்டு நாடுகளில், வெண்கல முரசுகள் வார்க்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது சில நாடுகளில், ஏன் சில தேசிய இனத்தவர்களிடையே வெண்கல முரசுகள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன.