• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குவெய் யாங் நகரிலுள்ள கன்பிஃசியஸ் கல்விக்கூடம்
  2014-07-29 08:45:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குவெய் சோ மாநிலத்தின் தலைநகர் குவெய் யாங்கில் கன்பிஃசியஸ் கல்விக்கூடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனப் பொது மக்களுக்கு தலைசிறந்த பாரம்பரியப் பண்பாட்டைப் பரவல் செய்யவும், பாரம்பரிய பண்பாடுகளின் வளர்ச்சியைப் புதுப்பிக்கவும், இக்கல்விக்கூடம் பாடுபட்டு வந்துள்ளது.

2010ஆம் ஆண்டு, குவெய் யாங் நகராட்சி அரசு கன்பிஃசியஸ் கல்விக்கூடத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தது. 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் இக்கல்விக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல், இக்கல்வி கூடம் செழிப்பான அம்சங்களைக் கொண்டுள்ள அதிகமான பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கைகள், உள்ளூர் பொது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.

கன்பிஃசியஸ் கல்விக்கூடத்தில், ஹான் மற்றும் டாங் வம்சக்கால சூழ்நிலை உணரப்படலாம். கன்பிஃசியஸ் சிற்பம் நிற்கின்றது. டா செங் மண்டபம் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கிறது. மிங் ரென் மண்டபத்தில் நூல்களைப் படிக்கும் குரல் வீசுகிறது. லியு யீ மாளிகையில் இசையொலி இனிமையாக கேட்கிறது. கன்பிஃசியஸ் கல்விக்கூடம் கோலாகலமான பாரம்பரியப் பண்பாட்டுச் சூழலில் உள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040